எபிரெயர் நிருபத்தின் பேரிலான கேள்விகளும் பதில்களும் பாகம்- II 57-1002 1. முதலாவதாக “மனைவிக்காக ஜெபிக்கும்படியான” செய்தியை பெற்றுக் கொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அவள் மிக, மிக சுகவீனமாயிருந்தாள். அது என்னவாயிருந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, என்ன சம்பவித்தது என்றும் எங்களுக்குத் தெரியவில்லை, அது கடுமையான வாந்தியாயிருந்தபடியால், அவள் சுயநினைவற்றிருந்தாள். காய்ச்சலோ ஏறக் குறைய நூற்றைந்து பாகையாயிருந்தபடியால், அவளை தொடர்ந்து பனிக்கட்டியால் சுற்றப்பட்ட துணிகளில் சுற்றி வைக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால்…ஆனால் அவள் இப்பொழுது நன்றாயிருக்கிறாள். காய்ச்சல் முற்றிலும் போய்விட்டது, அவள் சுகமாயிருக்கிறாள். எனவே அவள் மிக மோசமாக பெலவீனமாகி, ஏறக்குறைய பத்து பவுண்டுகள் குறைந்துவிட்டாள் என்று நான் நினைக்கிறேன். அவள்…கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இன்று தான் அவள் தன்னுடைய ஆகாரத்தை முதலாவதாகப் புசித்தாள். ஆகையால் அவள் மிகவும் சுகவீனமாயிருந்துகொண்டிருந்தாள், நாங்கள் அவளுக்காக கர்த்தரை நம்பியிருந்தோம், அவர் அந்த சுகவீனத்திலிருந்து அவளை வெளியேக் கொண்டு வந்தார். இப்பொழுது அவள் மீண்டும் தன்னுடைய பெலனை பெற்றுக் கொள்ளும்படி நீங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். 304 இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், வருகிற இந்த வார இறுதியில் நான் மியாமிக்கு செல்ல வேண்டியதாயுள்ளது. என்னுடைய வயோதிக நண்பர், சகோதரன் பாஸ்வர்த் அவர்கள் பரம வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார், அவருக்கு இப்பொழுது ஏறத்தாழ நூறுவயதாகிறது. எனவே அவர் என்னை அழைத்து, “சகோதரன் பிரான்ஹாம், ஒரு முறை என்னை வந்துப் பாருங்கள், ஏனென்றால் நான் பரம வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்” என்றார். அவர்…நல்லது, அவர் எனக்காக ஜெபிக்க விரும்புகிறார் என்றே நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியுமா? அவர் மரிப்பதற்கு முன்னர் தம்முடைய கரங்களை என் மீது வைத்து ஜெபிக்க விரும்புகிறார். 305 என்னுடைய நாட்கள் F.F பாஸ்வர்த் அவர்களைப் போல ஒரு கீர்த்தியோடு முடிவடையக் கூடும் என்று நான்—நான் நினைக்கிறேன். உலகில் நான் அறிந்த எல்லா மனிதரைக் காட்டிலும், உலகத்தில் எனக்குத் தெரிந்த எல்லா மனிதரையும் விட, நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேனென்றால் F.F பாஸ்வர்த் என்ற ஒரு ஊழியக்காரரைப் போல நான் இருக்க வேண்டும் என்று மிகவும் வாஞ்சையாயிருந்தேன், அப்படிப்பட்ட ஒரு மனிதனை நான் ஒரு போதும் சந்தித்ததேயில்லை. F.F. பாஸ்வர்த் அவர்கள் சரியாக ஒவ்வொரு காரியத்திலும் “ஒரு கிறிஸ்தவராக” இருந்தார் என்றும், ஒவ்வொரு காரியத்திலும் “ஒரு உண்மையான சகோதரனாயிருந்தார்” என்று எப்போதும் அவரைக் குறித்து எங்கும், உலகளாவிய அளவில் கூறப்படுகிற வாக்குமூலத்தைத் தவிர வேறெந்த நபரும் வேறெதையும் தவறாக அவரைப் பற்றிக் கூறினதை நான் ஒருபோதும் கேட்டதேயில்லை. 306 நமது அடிச்சுவடுகளைப் பின்னே கால மணல்களின் மேல் விட்டுச் செல்கிறோம். அவர் ஒரு அற்புதமான சகோதரனாயிருக்கிறார், இப்பொழுது அவர் உண்மையாகவே ஏறக்குறைய நூறு வயதான வயோதிகராயிருக்கிறார். ஆகையால் அவர்—அவர் பரம வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார், அவ்வளவுதான், அவர் அதை என்னிடம் கூறினார். அவர் போய்க் கொண்டிருக்கிறார் என்பதையும், அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் அறிந்திருந்திருக்கிறார். இப்பொழுது அவர் அதற்காக காத்துக் கொண்டிருப்பதே தம்முடைய ஜீவயத்தின் இனிமையான நேரம் என்று கூறினார், ஆனால் அவர் சென்று கொண்டிருப்பதை அவர் அறிந்திருப்பதாகக் கூறினார். 307 நான் சகோதரன் பாஸ்வர்த் அவர்களே, “இந்த வாரம் நான் மிக்சிகனுக்கு வர வேண்டியதாயிருக்கிறது” என்றேன். 308 அவர், “சகோதரன் பிரான்ஹாம் அதற்கு நீண்ட நேரம் ஆகாது, என்னால் அதிக நேரம் நீடித்திருக்க முடியாது. நான் எல்லா நேரத்திலுமே பலவீனமடைந்து கொண்டிருக்கிறேன்” என்றார். 309 ஆகையால் அவர் எனக்கு ஒரு மிக நெருக்கமான நண்பராய் இருந்து வருகிறார், எனவே அங்கு போகாமல் இருக்க முடியாது, இப்பொழுது நான் ஆகாய விமானத்தின் மூலம் சென்றால், நான்—நான் குறைந்த பட்சம் ஞாயிறு இரவன்று ஒருக்கால விமானம் மூலம் திரும்பிவிடலாம். அப்படியில்லையென்றால், அப்பொழுது நான் காரோட்டித்தான் செல்ல வேண்டும், அதற்கு எனக்கு சற்று இன்னும் கூடுதல் நாட்கள் ஆகலாம். 310 சகோதரன் பாஸ்வர்த் அவர்களுக்காக ஜெபியுங்கள். தேவன்…அவர் அந்த வயோதிகக் கோத்திரப் பிதாவை எடுத்துக் கொள்ளும்போது, அவர் ஒரு அக்கினி இரதத்தை அனுப்பி, அவரை மேலே கொண்டு செல்லும்படி ஜெபியுங்கள், பாருங்கள். நான் அவரை நேசிக்கிறேன், அவர் எனக்கு ஒரு தந்தையைப் போலவே இருந்து வருகிறார். 311 மற்றொரு வயோதிக மனிதன்…அவரை, சகோதரன் ஸீவர்ட். நான்—நான் ஒரு விதமான வயோதிக ஜனங்களின் சார்புடையவன், நான்—நான் அவர்களை நேசிக்கிறேன். வயோதிக சகோதரன் ஸீவர்ட் அவர்களும் கூட நித்திரையடைந்துவிட்டார். நிச்சயமாகவே, சகோதரன் ஸீவர்ட் அவர்கள் சகோதரன் பாஸ்வர்த்தைப் போல மிகவும் வயதானவர் அல்ல என்றே நான் நினைக்கிறேன். 312 சகோதரன் பாஸ்வர்த் அவர்களுக்காக ஜெபியுங்கள். அவரை சுற்றிலும் உள்ள யாவும் அருமையானதாக இல்லை, ஆனால் அது—அது…அவருக்கு உங்களுடைய ஜெபங்கள் தேவையாயிருக்கிறது, ஆனால் அதிகப்படியாக ஒன்றுமில்லை. ஆனால் அவருடைய…தேவன் அவரை சமாதனத்தோடு போகச் செய்யட்டும். 313 இப்பொழுது…ஆகையால் நாமும் கூட ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அதாவது நாளை, கர்த்தருக்குச் சித்தமானால், இந்த சபையிலிருந்த நம்முடைய சகோதரர்களில் ஒருவரான சகோதரன் சோல் கோட்ஸ் அவர்களை அடக்கம் செய்யப் போகிறோம். அவர் பலமுறை இங்கே வந்திருக்கிறார், அநேக வருடங்களாக தபால் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அன்றொரு இரவு அவர் இராணுவ படைத்துறை வீரர்களின் மருத்துவமனையில் மரித்துப் போய் விட்டார். சகோதரன் காக்ஸ் அவர்களும் நானும் அவரை அங்கு காணச் சென்றோம், அவர் நிலைமை மோசமாக இருந்தது, அவர் ஒரு கிறிஸ்தவராகவே இப்பொழுது மரித்துவிட்டார். எனவே நாங்கள் அவரை கூட்ஸ்—கூட்ஸினுடைய சவ அடக்க ஆராதனை நடத்தும் வீட்டிலிருந்து கொண்டு சென்று, நானும், சகோதரன் நெவிலும் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு அடக்கம் செய்ய உள்ளோம். நெவில் அவர்களின் மூவர் சேர்ந்து பாடும் குழுவானது பாடல்களை பாடும்; சகோதரன் நெவிலும் நானுமாக, நாங்கள் ஆராதனைகளை பிரித்துக் கொள்வோம். மேடாவின் சுகவீனத்தின் காரணமாக, எப்பொழுது அவர்கள் ஏற்பாடுகளை செய்தனர் என்பதை நான் அறியேன். எனவே அவருடைய அடக்க ஆராதனை நாளை பிற்பகல் ஒரு மணிக்கு கூட்ஸ் அவர்களின் இறுதி சவ அடக்க ஆராதனை வீட்டில் நடைபெறும். 314 அதன்பின்னர் வெள்ளிக் கிழமை இரண்டு மணிக்கு சகோதரன் வீலர் அவர்களின் அடக்க ஆராதனை நடைபெறும். நாங்கள் அவரை பாட் வீலர் என்று அழைத்து வந்தோம். அவர் ஒரு, நான் உண்மையாகவே அவருடைய சரியான…மறந்துவிட்டேன். உங்களுக்குத் தெரியுமா, நான் அவரைக் குறித்து கண்டறியும் வரை, முதலில் நான்—நான் அதை செய்தித்தாளில் கண்டபோது, அது யார் என்று தெரியவில்லை. அவர் அநேக வருடங்களாக எங்களுடைய ஒரு அண்டைவீட்டாராய் இருந்தார், அவரும் சற்று முன் மரித்துப் போய் விட்டார். அன்றொரு இரவு அவர் இங்கே சபையின் முன்னால் இருந்தார். அப்பொழுது நான் அவரை சபைக்குள் அழைத்துவர முயற்சித்துக் கொண்டிருந்தேன். அன்றொரு இரவும், ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னர் அங்கு நின்று, நான் அவரை சபைக்குள் வரும்படி சம்மதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் அவர் சபைக்கு செல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். வேறெந்த தொழிலையும் செய்யவில்லையென்றே நான் நினைக்கிறேன், அதே சமயத்தில் பாப்டிஸ்டு பிரசங்கியாயிருக்கிற ஒரு பையன் அவருக்கு உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் அவர் வருமானத்திற்காக எந்த வேலையையும் செய்ய வில்லை, அவர் இப்பொழுது தேவனை சந்திக்கச் சென்று விட்டார். ஆகையால் வெள்ளிக் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு சவ அடக்கத்திற்கு முன் சடலம் வைக்கப்பட்டுள்ள கூட்ஸினுடைய சவ சடலங்களிலுள்ள வீட்டில் இறுதி ஆராதனை நடைபெறும். சகோதரன் நெவில் மற்றும் சிலரும் கூட அந்த சவ அடக்க முன் இறுதி ஆராதனையில் பாடுவர். 315 ஆகையால் உங்களில் எவரேனும் அந்த ஆராதனைகளில் கலந்து கொள்ள விரும்பினால், அது நாளை இரண்டு…இல்லை நாளை ஒரு மணிக்கு நடைபெறும். அதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். சகோதரனே, அப்படித்தானே? இரண்டு மணிக்கு, மற்றொன்று ஒரு மணிக்கு நடைபெறும். அது சரியா? கூட்ஸினுடைய சடல பாதுகாப்பு இல்லத்தில் இரண்டு மணிக்கு நடைபெறும். 316 இப்பொழுது ஞாயிறு காலை…சனிக்கிழமை ஒலிபரப்பப்படும். ஞாயிறு இரவு நமக்கு ஒரு சுகமளிக்கும் ஆராதனை இருக்குமா அல்லது நான் சகோதரன் பாஸ்வர்த் அவர்களைக் காண பிளாரிடாவிற்கு ஆகாய விமானத்தின் மூலம் சென்றால், எந்த நேரத்தில் நாங்கள் திரும்பி வருவோம் என்பதை…எந்த நேரம் என்பதை அநேகமாக சகோதரன் நெவில் அவர்கள் நீங்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்வார். நான் எப்படி அவரிடத்திலிருந்து உடனே புறப்பட்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை, அவர் அப்பேர்பட்ட ஒரு அருமையான பழைய நண்பர். கர்த்தர் இதை அனுமதிப்பாரேயானால், இதுவே இந்த பூமியின் மேல் எங்களுடைய கடைசி சந்திப்பாயிருக்கலாம். அவர்…என்னால் உடனடியாக அவரிடத்திலிருந்து புறப்பட்டு வர முடியுமா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை; நான் அவரிடத்திலிருந்து உடனே புறப்பட்டு வர விரும்பவில்லை, ஆனால் அது எப்படியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் செய்ய வேண்டிய மற்றக் காரியங்களும் உங்களுக்கு உண்டு. 317 என்னுடைய நண்பர்கள் அநேகர் இல்லாதிருக்கையில், நான் இப்பொழுது இங்கே கூற விரும்புகிற ஒரு கூற்று உண்டு. 318 நான் அங்கே சகோதரி ஸ்மித் அவர்களைக் காண மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட காலத்திற்குப் பின்னர் முதன்முறையாக நான் அவளைக் கண்டேன். சகோதரி ஸ்மித் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஒரு வருடம், என்னே, கடந்த முறை நான் உங்களைக் கண்டது…[சகோதரி ஸ்மித் பேசுகிறார்—ஆசி.] பெண்டன் துறைமுகத்தில் என்று நான் நினைக்கிறேன். எப்போதாவது அங்கு செல்வேன் என்றே நான் நம்புகிறேன். அது அருமையாயுள்ளது. நான் கடந்த முறை உங்களைக் கண்டது லூயிவில்லில் நடைபெற்ற ஒரு அடக்க ஆராதனையில் என்று நான் நினைக்கிறேன். சகோதரி ஸ்மித் அது எனக்கு நன்கு ஞாபமிருக்கிறது. எப்படி நாம்…நாங்கள் சபைக்குச் செல்லும்போது நான் அவளை ஏற்றிச் செல்ல ஒரு பாரவண்டியில் வழக்கமாக வருவேன். அந்த வண்டியின் பின்புறத்திலோ கரி எண்ணெய் ஒழுகிக்கொண்டிருக்க, தடைகாப்புக் கம்பிகள் சரியாக இணைக்கப்படாமல் மேலும் கீழுமாக தொங்கிக் கொண்டிருக்க, குளிரில் என்னுடைய ஒரு காலை வெளிப்புறத்தில் வைத்துக் கொள்வேன். ஓ, என்னே. சகோதரி ஸ்மித் அதற்குப்பின் அநேகக் காலங்கள் உருண்டோடிவிட்டன. ஆம், ஐயா. நல்லது, அந்த விலையேறப்பெற்ற நினைவுகளுக்காக நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறோம், நாம் இன்னமும் அவரை நேசிக்கிறோம். 319 ஒரு காரியம், யாராவது வியப்புறலாம், அன்றொரு இரவு…நான் இங்கே வீதியிலே சகோதரன் பிளீமேன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். சில நேரங்களில் யாராவது, “ஆராதனை முடிவுற்றவுடனே, சகோதரன் பிரான்ஹாம் அவர்களை உடனே புறப்பட்டுப் போகச் செய்கிறது எது?” என்று கேட்கின்றனர். 320 அது என்னுடைய மனைவி தனிமையாயிருப்பதனாலேயாகும். புரிகிறதா? நான் பேசிக் கொண்டேயிருந்தால், அப்பொழுது நான் நள்ளிரவு வரை பேசிவிடுவேன். அவளோ பெரும்பாலன சமயங்களில் தனிமையாகவே அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறாள். அந்தக் காரணத்தினால்தான், நீங்கள் பாருங்கள், இரவு நேரத்தில் நான் அவளண்டை திரும்பிச் செல்ல துரிதமாக புறப்படுகிறேன்; ஏனென்றால் நான் பேசிக் கொண்டேயிருந்தால், நான் நீண்ட நேரம் பேசிவிடுவேன். நான் ஒருவரிடத்திலேயே அரை மணி நேரம் பேசுவேன். எனவே என்னால் சீக்கிரமாகச் சென்று, “இன்றிரவு நீ எப்படியிருக்கிறாய்? நீ எப்படியிருக்கிறாய்? நீ எப்படியிருக்கிறாய்?” என்று கேட்க முடியாது. நான் அதைச் செய்கிறதில்லை. ஆகையால் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டு போய்விடுகிறேன்; இல்லையென்றால் யாராவது எதைக் குறித்தாவது பேசப் போக வேண்டும், அப்பொழுது நான் அங்கே ஒரு மணி நேரமாவது இருப்பேன். புரிகிறதா? அந்தக் காரணத்தினால் தான் அவள் அந்த விதமாக காத்திருக்கிறாள். அதுதான் இதற்கான காரணமாயுள்ளது. எனவே நான் என்னுடைய நண்பர்களை சந்தித்து அவர்களுடைய கரங்களை குலுக்கி, நம்முடைய ஐக்கியத்தை வெளிப்படுத்தாமலிருந்ததற்கு காரணம் இதுதான என்று நீங்கள் எண்ணிக் கொள்ள நான் விரும்பவில்லை, ஆனால் அது அந்தவிதமான ஒரு சம்பவமாயிருந்தது. 321 ஆகையால், இப்பொழுது, சுகவீனமாயிருப்போருக்காகவும், பாதிக்கப்பட்டவருக்காகவும் ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். 322 திருமதி ஹார்வே அவர்கள் அந்த எல்லா தொல்லையிலும் இருக்கிறாள், அவள் இப்பொழுது குணமடைந்து கொண்டிருக்கிறாள். ஆம் ஐயா. நான் பார்க்கவில்லை…நான்…இப்பொழுது ஒரு கால், எனக்குத் தெரிந்தமட்டில் யாரோ ஒரு மருத்துவர் இங்கிருக்கலாம். நான் இந்த மேடையில் இருந்து தவறாகக் கூறினால், தேவனே என்னை மன்னியும். ஆனால் மருத்துவர்கள் அந்த ஸ்திரீக்கு என்ன செய்தனர் என்பதற்கு தேவன் அவர்களை பொறுப்புள்ளவர்களாக்குவார் என்று நான் நம்புகிறேன். நான்—நான் அறுவை சிகிச்சையில் நம்பிக்கை கொண்டுள்ளேன், நான் மருந்துகளில் நம்பிக்கை கொண்டுள்ளேன், நிச்சயமாகவே நான் அதை நம்புகிறேன். நமக்கு உதவி செய்யவே தேவன் அவைகளை இங்கே அனுப்பினார் என்று நான் நினைக்கிறேன், அதேவிதமாகவே கார்கள் முதலியவற்றிற்காக அவர் பொறித்துறை வினைஞர்களை அனுப்பினார். ஆனால் அந்த ஸ்திரீயையோ மருத்துவர் அவளை படுக்க வைத்து பரிசோதித்துவிட்டு, “அவள் முழுவதும் புற்று நோயினால் பீடிக்கப்பட்டிவிட்டாள், இனி அவளுக்கு ஒன்றுமே செய்யப்பட முடியாது” என்று கூறிவிட்டார். அந்த ஸ்திரீ ஒரு சில பிள்ளைகளுக்குத் தாய். 323 நான் அவளண்டை சென்று, எப்படி என்று ஜெபத்தின் மூலமாக அவளுக்கு விளக்க முயன்றேன்…அவள் ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடைய ஒரு வாலிப ஸ்திரீயாயிருந்தாள். தேவன் அவளுடைய சிறு குழந்தையை எப்படி குணப்படுத்தினார், அது மூளைக் காய்ச்சலிருந்து குணமடைந்து, “அற்புதக் குழந்தை” என்று இப்பொழுது குழந்தைகள் மருத்துவமனையில் அழைக்கப்படுகிறது. அந்த சிறு குழந்தையோ அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான நிலைமையிலிருந்தது, கர்த்தர் அதை அப்பொழுதே குணமாக்கினார். மருத்துவர்களால், அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் திருமதி ஹார்வே அவர்களிடம் சென்று, நான், “இப்பொழுது திருமதி. ஹார்வே, மருத்துவர்கள் உங்களை கைவிட்டுவிட்டார்களா?” என்று கேட்டேன். 324 “ஆம் ஐயா. அது…” என்றாள். 325 அவளுடைய கணவர், “ஆம், இனிமேல் ஒன்றுமே செய்யப்பட முடியாதாம், அவளுக்கு முழுவதுமே புற்றுநோய் பரவிவிட்டதாம்” என்றார். 326 அப்பொழுது நான், “பரவாயில்லை. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டுமென்று நாங்கள் விரும்புவதென்னவென்றால், தேவனை விசுவாசியுங்கள், அதாவது தேவன் உங்களைக் குணப்படுத்துவார்” என்று கூறினேன். மேலும் நான், “அது எப்படி சம்பவிக்குமென்றால், புற்று நோய் உடனடியாக போகாமலிருக்கலாம்; ஆனால் நாங்கள் ஜெபித்தால், அப்பொழுது புற்று நோயின் உயிர் போய்விடும். அதே சமயத்தில் நீங்கள் சிலகாலம் சுகவீனமாயிருக்கலாம்” என்று கூறி, “அதன்பின்னர் நீங்கள் நிவாரணமடையலாம்.” என்றும் கூறினேன். மேலும் தொடர்ந்து நான், “அதன் பின்னர் ஒரு சில நாட்கள் நீங்கள் இருந்ததைவிட சுகவீனமடையலாம்” என்றேன். ஆனால் நான், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை புற்று நோய்க்கு எதிராக வைக்க வேண்டும்” என்றேன். நான், “புற்றுநோய் உயிர்வாழ்ந்தால், நீங்கள் மரித்துப் போவீர்கள், புற்று நோய் மரித்தால், நீங்கள் பிழைப்பீர்கள்” என்றேன். அப்பொழுது நான், “இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம்” என்றேன். 327 நாங்கள் ஜெபித்தோம், நான் ஒவ்வொரு ஆதாரத்தையும் கண்டிருந்தேன், தேவன் அந்த ஸ்திரீயினுடைய சரீரத்தைத் தொட்டார். உடனடியாக அவள் மேலான நிலையை அடைந்தாள், அவள் என்னுடைய தாயைக் காணச் சென்றாள், அவள் சுற்றிலுமிருந்த அயலகத்தார்களை காண விஜயம் செய்தாள், (அவள் அப்பேர்ப்பட்ட துன்பத்தில் இருந்தாள்) ஆனால் இப்பொழுது அவளுக்கு வலியே இல்லை. அதன்பின்னர் ஏறக்குறைய மூன்று நாட்கள் கழித்து அவள் மீண்டும் சுகவீனமடையத் துவங்கிவிட்டாள். 328 அதன்பின்னர் அந்தப் பட்டிணத்தார் அதைக் கண்டறிந்து, “மருத்துவர்கள் அதற்கு அறுவை சிகிச்சை செய்தால், அவர்கள் அந்த மருத்துவக் கட்டணத்தை செலுத்திவிடுவோம்” என்று கூறினர். 329 இப்பொழுது நான் தவறாகக் கூறினால், தேவனே என்னை மன்னியும், ஆனால் அவர்கள் அந்த வாலிப தாயைக் கொண்டு சென்று, அவளை “மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தினர்.” அவர்கள் அங்கிருந்து அவளை அழைத்துச் சென்று, அவளுடைய வயிற்றிலிருந்து அவளுடைய குடல்களையும் மற்ற ஒவ்வொன்றையுங் கூட பரிசோதித்தனர். சிறு நீர் கழிக்கும் இடம், செயல்பாட்டிலிருந்த குடல்களையும் எடுத்து பரிசோதித்துவிட்டு, பக்கவாட்டில் மீண்டும் நுழைத்து விட்டனர். அவள் அறுவை சிகிச்சை செய்யும் மேஜையின் மேல் ஒன்பது மணி நேரமாகவோ, அதற்கு சற்று அதிகமான நேரமாகவோ இருந்தாள். மருத்துவச்சியோ, “அது ஒரு இறைச்சிக் கூடம் போன்றே காணப்பட்டது என்றும், அங்கே அவர்களை அவளுடைய உட்புறத்திலிருந்ததை ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெட்டி எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக பிளாஸ்டிக் கருப்பைகளையும், பிளாஸ்டிக் குழாய்களையும் பொருத்தினர்” என்று கூறினாள். அது வெளிப்படையானது, ஆனால் அது உண்மை. பிளாஸ்டிக் குடல்கள் மற்றும் அதுபோன்றவைகளை அதில் பொருத்த அந்த ஸ்திரீ கிடத்தப்பட்டிருந்தாள், ஒரு சிறு தாய். நான் என்னுடைய வழியில் அதை சிந்தித்துப் பார்க்கும்போது, அந்த மருத்துவர்கள் கொலைக் குற்றவாளியாயிருக்கிறார்கள் என்றே கூறுகிறேன். 330 அவள் அவர்களிடத்தில் கூறினாள், அதாவது அவள், “சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபித்தார்” என்று கூறியிருந்தாள். மேலும், “அந்தப் புற்று நோய்…அந்தப் புற்று நோய் மரித்துப் போய்விட்டது என்றே நாங்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினாள். 331 அதற்கு மருத்துவரோ, “நான் உனக்கு கூற வேண்டிய ஒரு செய்தி உண்டு, ‘அது உன்னுடைய புற்று நோய் உயிரோடுதான் உள்ளது’ என்பதாகும்” என்றார். 332 அவரால் எப்படி அதைக் கூற முடிந்தது? அதுவோ உட்புறத்தில் இருந்தது, எந்த ஊடுகதிர் நிழற்படமும் அதைக் காட்ட முடியாது. புற்று நோய் ஒரு…உங்களால் ஊடுகதிர் நிழற்படத்தின் மூலம் புற்று நோயைக் கண்டறிந்து கூற முடியாது, அது மாம்சத்தில்தானே உள்ளது, உங்களால் அதைக் காண முடியாது. அந்த ஸ்திரீயினுடைய உட்புற சரீர சதைகளை வெட்டி, அதனுடைய துண்டுகளை பரிசோதித்துப் பார்த்து மாத்திரமே கண்டறியக் கூடும். அவ்வளவுதான். இப்பொழுது அந்த சிறு தாயாருக்கு புற்று நோய் அவ்வாறு தொடர்ந்து இருந்திருந்தாலும், நானோ அந்தவிதமான ஒரு பரிசோதனையை யாரோ ஒருவர் செய்வதைப் பார்க்கிலும் அவளுடைய விசுவாசத்தை தேவன் பேரில் வைத்து சோதித்துப் பார்க்கச் செய்திருப்பேன். இப்பொழுது நான்—நான் தவறான எண்ணத்தை உடையவனாயிருந்தால், அப்பொழுது தேவன் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நீங்கள் பாருங்கள். காரணம் நான் அறுவை சிகிச்சைகளில் நம்பிக்கைக் கொள்வதில்லையென்றும், அல்லது மருத்துவர்கள் மற்றுமுள்ளக் காரியங்களில் நம்பிக்கைக் கொள்வதில்லையென்றும் நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பரவாயில்லை. ஆனால் நீங்கள் ஒரு நபருக்குள்ளாக வெட்டி ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்னர் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும், அவர்களை அதைப் போன்று வெறுமென பரிசோதனைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றே நான் எண்ணுகிறேன். அது உண்மை. இப்பொழுது உண்மையாகவே அவளால் உயிர்வாழ முடியாது. அவ்வளவுதான். அவள் பிழைப்பானேயானால், அப்பொழுது அது நிச்சயமாகவே எப்போதும் சம்பவித்திருந்த மகத்தான அற்புதங்களில் ஒன்றாகவே இருக்கும். அந்த ஸ்திரி கீழ் நோக்கிப் பார்த்து, தன்னுடைய குடல்கள் ஒரு பக்கத்தில் இருந்ததையும், அவளுடைய சிறுநீரகங்கள் மறுபுறத்தில் செயல்பட வேண்டியதாயிருந்ததையும் கண்டபோது, அவள் இந்தவிதமாகவே மயங்கிப் போய்விட்டாள், மயங்கியேவிட்டாள்…ஏன்? அது ஒரு காரியமாயிருக்கவில்லை…அந்த பரிதாபமான சிறிய ஸ்திரீ மயங்கிவிட்டாள். மூன்று அல்லது நான்கு பிள்ளைகளை வளர்க்க வேண்டிய கிட்டத்தட்ட இருபத்திரண்டு அல்லது இருபத்தைந்து வயதுடைய ஒரு தாய். என் வாழ்க்கையில் நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் விசனமானக் காரியம். நான், “என்னுடைய வழியில் அதை சிந்தித்துப் பார்க்கும்போது, மருத்துவர்கள் அதற்கு…குற்றவாளியாயிருக்கிறார்கள்” என்றே கூறினேன். அந்த பட்டிணம் அவளுடைய மருத்துவ செலவினை செலுத்தப் போவதாயிருந்தபடியால் அவர் அந்த ஸ்திரீயை ஒரு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றிருந்தால், அப்பொழுது அது தவறாகும், அது அனுமதிக்கப்படக் கூடாது. 333 [தேவனால் அந்த ஸ்திரீக்கு சுகத்தை திரும்பளிக்க முடியுமா என்று ஒரு மனிதன் கேட்கிறார்—ஆசி.] நல்லது, சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இது கூடாதது அல்ல. அது—அதுவல்ல…அது—அது கூடும், நிகழ்க் கூடியதாகவே உள்ளது. காரணம் கலிபோர்னியாவில் ஒரு கரமே இல்லாதிருந்த ஒரு மனிதனை நான் அறிவேன், (நீங்கள் எல்லோருமே செய்தித்தாளில் வெளியான அதை வைத்திருக்கிறீர்கள்), அந்த மனிதனுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது, இந்தக் கரம் இங்கே மேலே இல்லாதிருந்தது, அது கீழே வளர்ந்து விரல்கள் அதிலிருந்து இப்பொழுது வளரும் வரை, அதாவது மேலிருந்து முழங்கை வரை, மணிக்கட்டு வரை, பின்னர் உள்ளங்கை வரை, அதனுடைய விரல்களின் பின்னால் உள்ள கை முட்டிகளின் பாகங்கள் வரை வளர்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒவ்வொரு மாதமும் விசுவாச தூதன் என்ற பத்திரிக்கையில் வெளி வந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த மனிதன் இந்த விதமாக தன்னுடைய கரத்தைப் பெற்றுக் கொண்டபோது, அவருடைய கரம் எங்கேயிருந்து இல்லாதிருந்தது என்றும், அது எங்கிருந்து வளர்ந்து வந்தது என்றும் அந்தப் பத்திரிக்கையில் காட்டப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடகாலமாக அது எப்படி ஒவ்வொரு மாதமும் வளர்ந்து வந்தது என்றும் அதில் காட்டப்பட்டிருந்தது. 334 [முன்பு பேசின மனிதனே மீண்டும் சபையிலிருந்து பேசுகிறார்—ஆசி.] நிச்சயமாக, அது உண்மை. நான் நினைக்கிறேன…அது—அது—அது ஒரு அபூர்வமான காரியம், பாருங்கள், அது ஒரு மிக அபூர்வமான காரியம். ஒரே ஒரு முறை தான் நான் அதைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது, சகோதரன் பாஸ்வர்த், அவர் ஒரு இரவு ஒரு ஸ்திரீக்காக ஜெபித்தார். நான் என்னுடைய கூட்டத்தில் ஒருவரை உடையவனாயிருந்தேன். ஆனால் பாஸ்வர்த்தினுடையதோ உடனடியாக நிகழ்ந்தேறியது; ஆனால் என்னுடையது நிறைவேற சிலகாலம் தேவைப்பட்டது. 335 அவர் ஒரு ஸ்திரீக்காக ஜெபித்தார்…இப்பொழுது, நான் அந்த ஸ்திரீயினுடைய சாட்சியை வாசித்தேன். அவளுக்கு புற்று நோயிருந்தது, அது அவளுடைய மூக்கை தின்று விட்டபடியால் அவளுக்கு மூக்கேயில்லாதிருந்தது. ஜெபித்த அடுத்த நாள் காலையில் அவளுக்கு மூக்கு உண்டாயிருந்தது. இப்பொழுது, நான் இதை அறிவேன்…அது சகோதரன் பாஸ்வர்த்தினுடையது, அது கிறிஸ்துவே சுகமளிப்பவர் என்று பெயரிடப்பட்டுள்ள அவருடைய புத்தகத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன் அல்லது சந்தோஷத்தை கொண்டு வருபவர் என்ற ஒரு புத்தகத்தில் இருக்கலாம். இப்பொழுது, அதில் அந்த ஸ்திரீயினுடைய சாட்சி, அவளுடைய பெயர் மற்றும் முகவரியோடு உள்ளது. அது சம்பவித்ததை நிரூபிக்கும்படியாக அவள் அயலகத்தார்கள், மருத்துவர்கள் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் உடையவளாயிருக்கிறாள். 336 இப்பொழுது, நான் ஒரு இரவு ஒரு அறையில் ஆர்கன்ஸாஸில் உள்ள லிட்டில் ராக்கில் அங்கே…ஜெபித்திருந்தேன்…லிட்டில் ராக்கில் அல்ல, ஆனால் ஜோனஸ்பரோவில். அதாவது நான் ஜெபிப்பேன்…நான், “கடைசி நபருக்காக நான் ஜெபிக்கும் வரை நான் தரித்திருக்கப் போகிறேன்” என்றேன். அப்பொழுது நான் எட்டு இராப்பகல் மேடையிலேயே இருந்தேன், பார்த்தீர்களா? அப்பொழுது,…அந்த அறைக்குப் பக்கத்தில் ஒரு ஸ்திரீ வந்தாள், அவள் இந்த விதமாக தன்னுடைய கைக்குட்டையை வைத்திருந்தாள், அப்பொழுது அவள் அழுது கொண்டிருந்தாள் என்று நான் எண்ணினேன். அப்பொழுது நான் கூறினேன்…ஓ, அது காலை இரண்டு அல்லது மூன்று மணியாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன், நான், “சகோதரியே அழாதீர்கள், தேவன் சுகமளிப்பவராயிருக்கிறார்” என்றேன். 337 அப்பொழுது அவள், “சகோதரன் பிரான்ஹாம், நான் அழுது கொண்டிருக்கவில்லை” என்றாள். பின்னர் அவள் கைக் குட்டையை எடுத்த போது, பாருங்கள், அவளுக்கு மூக்கே இல்லாதிருந்தது. மருத்துவர்கள் இவ்வாறு கூறியிருந்தனர்…புற்று நோயானது அவளுக்குள்ளாக இருந்த வெள்ளை எலும்பையே தின்று விட்டிருந்தது…அவர்கள் அதை காண்பித்துக் கொண்டிருந்தனர். நான் அவளுக்காக ஜெபித்து, கர்த்தர் அவளைக் குணப்படுத்தும்படி வேண்டிக்கொண்டேன். 338 அப்பொழுதிலிருந்து ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து வாரங்கள் நான் டெக்ஸார்கானாவில் இருந்தேன், அப்பொழுது அங்கே அருமையாக ஆடையணிந்திருந்த ஒரு பெருந்தன்மையானவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு காரியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். 339 அவர் மேடையண்டை எழும்பி வந்தவுடனே, வாயிற் காப்போன்களில் ஒருவர் அவரை அமைதியாயிருக்கும்படிச் செய்ய முயன்றார். அப்பொழுது நானோ, “பரவாயில்லை, நாம் என்னவென்று பார்ப்போம்” என்றேன். 340 அப்பொழுது அவர், “உங்களால் இந்த வாலிபப் பெண்மணியை அடையாளங் கண்டு கொள்ள முடிகிறதா?” என்று கேட்டார். 341 அதற்கு நான், “இல்லை, எனக்கு அடையாளங்கொள்ள முடியவில்லை” என்றேன். 342 அவர், “நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்திருந்தால், நீங்கள் அவளை அடையாளங் கண்டு கொண்டிருப்பீர்கள்” என்றார். அவர் டெக்ஸர்கானாவில் சுத்தம் செய்வதற்கு சர்வ நாசம் செய்கிறவராயிருந்தார், அது ஒரு புத்தம்—புதிய வளர்ந்த, மற்றவர்களுக்கு இருப்பது போன்றே வடிவங்கொண்ட மூக்குடன் இருந்த அவனுடைய தாயாயிருந்தது. 343 இப்பொழுது தேவனையே…அது காண்பிக்கப் போகிறது, அது சிருஷ்டிக்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது தேவனால் அந்த திருமதி. ஹார்வேக்காகவும் அதைச் செய்ய முடியும். அந்த பரிதாபமான ஸ்திரீ ஜீவிக்க விரும்புகிறதற்காக அவர் அதை செய்வார் என்று நான் ஜெபித்தேன். 344 சகோதரன் டோனி, நீங்கள் கூற வேண்டியது ஏதேனும் உண்டா? [சகோதரன் டோனி ஒரு சுகமளித்தலைக் கூறுகிறார்—ஆசி.] அது உண்மை. ஆமென். ஆமென். சரி, அதுவும் கூட நல்லதாயிருக்கிறது. ஆம், அவர் அதை நிச்சயம் செய்வார், அவர் ஒரு சுகமளிப்பவராயிருக்கிறார். 345 [மற்றொரு மனிதன் கருத்துரை வழங்குகிறார்—ஆசி.] ஆம், ஆம், சகோதரனே. ஆமென். நிச்சயமாக. ஆம். நான் நிச்சயமாக…மகனே, தேவன் அதை உங்களுக்கு திரும்பளிக்கிறார் என்று நான் நம்புகிறேன், எனவே நீங்கள் அதை திரும்பக் கொண்டு சென்று அவருக்கு காண்பிக்க முடியும். அதுவே சரியானது. அது தேவனுடைய மகிமைக்கான ஒரு சாட்சியாயுள்ளது, தேவன் அதைச் செய்வார் என்று ஜெபியுங்கள். ஓ, அவர்—அவர்…அவர் சர்வ வல்லமையுள்ள தேவனானால், அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும். அவரால் அதை, எல்லாக் காரியங்களையும் செய்ய முடியவில்லையென்றால், அவர் சர்வ வல்லமையுள்ள தேவன் அல்ல. 346 நாம் என்னவாக இருக்க வேண்டும், நாம் இருக்க வேண்டிய விதத்திலும் நம்மை உண்டாக்கின ஒரு காரியம் உண்டு, இல்லையென்றால் நாம் ஒரு—ஒரு—ஒரு பறவையைப் போன்ற தலையை அல்லது அதைப் போன்ற ஒரு காரியமாயிருந்திருப்போம்; ஒரு தனிச் சிறப்போடு நம் ஒவ்வொருவரையும் உருவாக்க நமக்குப் பின்னே ஒரு மதிநுட்பம் இல்லாதிருந்திருந்தால், ஒரு கருவாலி மரத்தை, ஒரு புன்னை மரத்தை, ஒரு பனைமரத்தை, அவைகள் என்ன என்று வித்தியாசத்தை வேறுபடுத்திக் காட்டி உருவாக்க ஒரு மதிநுட்பம் இல்லாதிருந்திருந்தால் என்னவாயிருக்கும்? நம்மை…ஏதோ விலங்கின் மென்முடியோடு, ஏதோ சிறகுகளோடு, ஏதோ ஒரு சருமத்தோடு உண்டாக்கவில்லை, அதாவது உங்களை…பாருங்கள், அது—அது அதற்குப் பின்னால் உள்ள ஒரு மதிநுட்பமாய் உள்ளது, அதுவே—அதுவே அதை ஆளுகை செய்கிறது. உண்மையாகவே அவர் தம்முடைய கரங்களில் எல்லாக் காரியங்களையும் தாங்குகிறார். அவரால் எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். நாம் அதற்காக ஜெபிப்போம். நாம் ஜெபம் செய்வோம். 347 [மற்றொரு மனிதன் சபையிலிருந்து பேசுகிறார்—ஆசி.] சரி. நாம்… 348 [சகோதரி ஸ்னைடர், “சகோதரன் பில்லி, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்கிறார்—ஆசி.] சரி, அம்மா, அதனால் பரவாயில்லை, சரி கூறுங்கள். [சகோதரி ஸ்னைடர், அவர்கள் சகோதரன் பிரான்ஹாம் அன்றொரு ஞாயிறு அவளுக்காக ஜெபித்தபோது “சுகமடைந்ததைக்” கூறுகிறாள்.] ஆமென். உங்களுக்குத் தெரியும், நானும் அதை எண்ணிப் பார்க்க முயற்சித்திருக்கிறேன், சகோதரி ஸ்னைடர், ஒரு சமயம் நான் அந்த அபிஷேகத்தில் இங்கே நின்று கொண்டிருந்தபோது, நான் நினைத்தேன்…நான் சகோதர்ன் காக்ஸ் அவர்களிடம் கூறினேன், நான், “இந்த கூடாரத்தில் இனிமேல் நான் ஒருபோதும் அந்த பகுத்தறிதல்களைக் கொண்ட கூட்டங்களை நடத்த முயற்சிக்கக் கூடப் போவதில்லை” என்றேன். ஓ, சகோதரியே, பிசாசு என்னைச் சுற்றி எப்படி கடிக்கிறான் எனபதை நீங்கள் அறியீர்கள். அவன் எப்படி—எப்படியய் அதைச் செய்கிறான். இந்த பகுத்தறிதலைக் குறித்து எனக்குத் தொல்லை கொடுக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். 349 இங்கே, திருமதி.உட் அவர்களுடைய சகோதரிக்கு இங்கே சம்பவித்ததைக் கண்டறிகிறோம்…அவர்களுடைய ஜனங்கள் எவரையுமே நான் ஒரு போதும் கண்டதேயில்லை. அந்த நேரத்தில் அவர்களுடைய ஒரு கூட்டமே சுகமடைந்து, ஒவ்வொருவரும்…ஏன், சுகமடைந்திருந்த அந்த ஜனங்களின் சதவிகிதமோ எண்ணிக்கையில் பெரியது என்பதை நீங்களே அறிவீர்கள். அதற்குப் பிறகு…இப்பொழுது விநோதமான காரியம்; அவளுடைய சகோதரியோடு கிட்டத்தட்ட அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அவளோடு ஒரு இரவு இரவு ஆகாரத்தை புசித்திருந்தேன்…ஓ, அது கெண்டக்கியில் உள்ள மலைகளில் கீழே உள்ள வழியாகும், அவளுக்கு திருமதி.உட் அவர்களைப் போன்ற குரல் இருந்ததை நான்—நான் அறிந்திருந்தேன், அந்த அறையில் அதிக வெளிச்சமில்லாமலிருந்தது, நான் அவளிடத்தில் எந்த கவனத்தையும் செலுத்தாமல், அவளுடைய கணவனிடத்தில் அதிகமாக பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது அவளோ இரவு உணவினை ஆயத்தம் செய்திருந்தான். எனவே நாங்கள் சென்று அமர்ந்து புசித்துவிட்டு, மீண்டும் திரும்பி உள்ளே வந்து அவளுடைய கணவனிடத்திலேயே நான் பேசினேன், அவளோ எழுந்து வெளியே போய்விட்டான். என்னுடைய பயபக்திக்குரிய நியாயாதிபதியாயிருக்கிற தேவன் (இந்த பிரசங்க பீடத்தின் அருகில் நிற்கிற) நான் அந்த ஸ்திரீயை ஒரு போதும் அடையாளங்கண்டு கொள்ளவில்லை என்பதை அறிந்திருக்கிறார். 350 அப்பொழுது சுகமளிக்கும் ஆராதனை முடிவுற்றப் பிறகு, நான் மனந்திரும்பும்படிக்கு பாவிகளுக்கான பீட அழைப்பைக் கொடுத்தேன். அவளோ அதற்கு எதிராக மிகவும் கர்வமுள்ளவளாயிருந்து வந்தாள்; அப்பொழுது அவள் மனந்திரும்பி, அவளுடைய ஜீவயத்தை கிறிஸ்துவுக்குக் கொடுத்து, கிறிஸ்துவுக்கு தன்னுடைய ஜீவனை ஒப்புக் கொடுக்க மனதுள்ளவளாய் தன்னுடைய கரத்தை உயர்த்தி, அழுதுகொண்டிருந்தாள். என்னுடைய பீட அழைப்பு முதலியனவற்றை விடுத்து, எல்லா அபிஷேகமும் போய்விட்டப் பிறகு, அப்பொழுது நான் திரும்ப நேர்ந்தபோது, இங்கே ஒரு தரிசனம் உண்டானது, அப்பொழுது நான் அவளுடைய சகோதரரைக் கண்டேன்; ஒரு சகோதரியும் இருந்தாள், இது அவளுடைய சகோதரி, அவர்கள் ஒன்றாயிருந்தனர். 351 அது சார்லியினுடைய மனைவி என்று நான் நினைத்தேன், ஏனென்றால் அன்றொரு நாள் சார்லியினுடைய வீட்டில் மேஜையண்டை அமர்ந்திருந்ததை நான் அறிந்திருந்தேன்,…அவருடைய மனைவி, சிறு உருவம் படைத்தவள், அப்பொழுது கர்த்தர் அவளுக்கிருந்த ஒரு தொல்லையை எனக்குக் காண்பித்தார். அந்த மணி வேளையிலேயே கர்த்தர் அவளுடைய சரீரத்தைத் தொட்டார், அப்பொழுது அவளுடைய மேஜையண்டை அங்கே அமர்ந்திருந்தாள். டோனி நாம் எங்கேயிருந்தோம், அங்கே அணில் வேட்டைக்குச் சென்றிருந்தோம். கர்த்தர் அவளுடைய சரீரத்தைத் தொட்டு, அவள் முழுவதுமே…அணிந்து கொள்ள வேண்டியிருந்த இந்தக் காரியத்தை அவளுடைய எஞ்சியுள்ள ஜீவியத்திற்காக அவளிடத்திலிருந்து எடுத்துப் போட்டுவிட்டார்; அங்கே அப்படியே அமர்ந்திருந்தாள். அந்த ஸ்திரீ எப்பொழுதுமே மேஜையின் மறுமுனையில் ஆகாரம் புசிக்கிறவள், ஆனால் அவள் சுற்றி வந்து, தன்னுடைய நாற்காலியை உள்ளே நகர்த்தி, எனக்குப் பக்கத்தில் அமர்ந்து புசித்தாள். அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை அவள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவளுடைய கணவர் இந்தவிதமாக அமர்ந்திருந்தார், சகோதரன் பாங்க்ஸ் அங்கே அமர்ந்து எங்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவள் சுற்றி வந்து, தன்னுடைய நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து, என்னருகில் அதைப் போட்டு அமர்ந்தாள். அது ஒரு நோக்கத்திற்காகவாயிருந்தது, கர்த்தர் அங்கே ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். நான் அவளுடைய கணவரை வெளியே அழைத்தேன், ஏனென்றால் அது ஒரு ஸ்திரீகளுக்கான கோளாறாயிருந்தது, என்ன சம்பவித்தது என்பதைக் குறித்து நான் அவரிடம் கூறத் துவங்கினேன். அவர், “சகோதரன் பிரான்ஹாம், அது சரியாக அந்த விதமாகவே, சரியாக அந்த விதமாகவே சம்பவித்தது” என்று கூறினார். கர்த்தர் அவளை குணப்படுத்திவிட்டார் என்று அவர் அவளிடத்தில் கூறினார். சரி. 352 அதன் பின்னர் அன்றொரு இரவு ஆராதனை முடிவுற்றப் பிறகு, இந்த மற்ற சகோதரியை, இந்த வாலிப சார்லஸ் அவர்களும் இந்த ஸ்திரீயும் ஒன்றாயிருப்பதை நான் கண்டேன். அப்பொழுது நான், “அது அது அவருடைய மனைவியாயிருக்க வேண்டும்; ஆனால் அவளுடைய மனைவியே ஒரு இளம்பொன் நிறங்கொண்ட தலையினையுடைய ஒரு ஸ்திரீயாயிருக்கிறாளே” என்று எண்ணினேன். அப்பொழுது அங்கே இருந்த ஒரு மூலையில் தரிசனம் தோன்றினதை நான் கவனிக்க நேர்ந்தது. அப்பொழுது அவள் அங்கே அமர்ந்து கொண்டு தன்னுடைய கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள், கர்த்தர் ஒரு தரிசனத்தைக் காண்பித்திருந்தார்,…பீட அழைப்பிற்கு பிறகு அவள்…ஜெபக் கூட்டம் முடிவுற்றப் பிறகு, வியாதியஸ்தரின் சுகமளித்தலுக்குப் பின்னர், பீட அழைப்பு விடப்பட்டிருந்தது, அப்பொழுது அவள் மனந்திரும்பி, தன்னுடைய ஜீவனை தேவனண்டை அளிக்கும் வரை அவர் காத்திருந்தார். அதன்பின்னர் அவள் திரும்பி செல்ல, அவளைக் குணப்படுத்தினார். அவள்…அவளுடைய தொல்லைகளோடு பல வருடங்களாக அவளுடைய சரீர பாகங்கள் வீங்கியிருந்தன. அவளுடைய சரீரத்திலிருந்து (விஷமானது) அவளுடைய சுருங்கியிருந்த பாதம் வரைக்கும் சென்று பரவியிருந்தது. அவள் இத்தனை வருடங்களாக உணர்ந்ததைவிட இப்பொழுது மேலாக உணருகிறாள், பாருங்கள், கர்த்தர் எப்படியாய் தம்முடைய ஆச்சரியமான கிருபையினால் அதைச் செய்கிறார். அதுவே அதைக் குறித்து நிகழ்ந்த சம்பவம் என்று நான் நினைக்கிறேன்; இல்லையா, சகோதரி உட்? எப்படியாய் அவர் செய்கிறார். பிறகு…என்ன கூறுகிறீர்கள்? [சகோதரி உட், “அவள் கடந்த வாரம் ஏழு பவுண்டுகள் எடை குறைந்து விட்டாள்” என்கிறாள்—ஆசி.] ஒரு வாரத்தில் ஏழு பவுண்டுகள் குறைந்துவிட்டாள். ஓ அவர் தேவனாயிற்றே! அவர் தேவனல்லவா? 353 இப்பொழுது, நான் சகோதரன் நெவிலிடம் கூறின காரணத்தை நான் உங்களுக்குச் சொல்லுவேன்…இன்றிரவு அவர் ஒரு செய்தியை உடையவராயிருக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனாள் அவரோ, “இல்லை” என்று கூறிவிட்டார், அவர் வைத்திருக்கவில்லை. இங்கே பதிலளிக்காமல் விடப்பட்டுள்ள ஒரு சில கேள்விகளை நான் வைத்திருக்கிறேன், நான் இங்கே இந்த கேள்விகளுக்கு நேர்மையுணர்வோடு பதிலளிக்க கடமைபட்டிருப்பதை உணர்ந்தேன். அதன் பின்னர் இரண்டு அல்லது இன்னும் மூன்றை நான் வைத்துள்ளேன், அநேகமாக இன்றிரவு நான் பதிலளிக்கமாட்டேன். 354 ஒரு பிரசங்கியாரிடத்திலிருந்து சில என் கரத்தில் கொடுக்கப்பட்டன என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க வேண்டும். சகோதரன் நெவில்…இல்லை பீலர் அவைகளை என்னிடத்தில் கொண்டு வந்தார். [சகோதரன் பிரான்ஹாம் பின்வரும் எட்டு கேள்விகளுக்கும் பாகம் III-ல் பாரா 668—ல் துவங்கி, கேள்வி எண்கள் 67-லிருந்து 74—வரை பதிலளிக்கிறார்—ஆசி.] வெளிப்படுத்தின விசேஷம் 21:19 மற்றும் 20-ல் உள்ள கற்கள் எதைச் சுட்டிக் காட்டுகின்றன? வெளிப்படுத்தின விசேஷம் 5-ல் உள்ள நான்கு ஜீவன்களை விளக்கிக் கூறவும்…அவர் 6-ம் அதிகாரத்தையே பொருட்படுத்திக் கூறுகிறார்; அது வெளிப்படுத்தல் 5-அல்லவா, அது 6-ல் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இருபத்தி நான்கு மூப்பர்கள் யார்? ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் என்ன பொருட்படுத்தினது? வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள இரண்டு சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்பட வேண்டிய வெகுமதிகள் எங்கே உள்ளன? ஆயிர வருட அரசாட்சிப் பிறகு பரிசுத்தவான்கள் எங்கே இருப்பார்கள்? அவர்கள் எந்த விதமான ஒரு சரீரத்தை உடையவர்களாயிருப்பார்கள்? நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்? கொரிந்தியர் முதலாம் நிருபத்தில் உள்ளபடி தூதர்களினிமித்தமாக ஏன் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும்? 355 இந்த நல்ல கேள்விகளைக் குறித்துப் பேசுவோம், அதில் சில நல்ல கேள்விகள் உள்ளன. இன்றிரவு நான் அவைகளுக்கு அநேகமாக பதிலளிக்கமாட்டேன், ஆனால் கர்த்தருக்குச் சித்தமானால், அதற்காக நாம் அடுத்த முறை வரும்போது நான் அவைகளுக்கு பதிலளிக்க முயற்சிப்பேன். 356 நான் இன்றிரவு இங்கே சில மிக நல்ல கேள்விகளை வைத்துள்ளேன்; ஆகையால் நாம் இப்பொழுது ஜெபித்து, கர்த்தர் நமக்கு உதவி செய்யும்படி வேண்டிக் கொண்டு, அடுத்த ஓ, முப்பதைந்து, நாற்பது நிமிடங்களில் அவைகளுக்குள்ளாக நாம் நேராகச் செல்வோம். 357 இப்பொழுது, ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, நீர் எங்களுக்காக செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, அது உம்முடைய கிருபையானது எப்படி எங்களை வந்தடைகிறது என்பது மிகுந்த ஆச்சரியமாய் உள்ளது. நான் இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், அன்றிரவு என்னுடைய துணைவி, ஓ, மிகவும் சுகவீனமாயிருந்தபோது, நீர் காட்சியில் வந்தீர். அவளுடைய காய்ச்சலானது அந்த மணி நேரத்திலேயே நீங்கிப் போயிற்று, இப்பொழுது முற்றிலும் சுகமடைந்துவிட்டாள். நான் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்…இன்றிரவு ஒவ்வொருவரும் கேட்டுள்ள ஒவ்வொரு வேண்டுகோளோடும் நீர் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அது எங்களுடைய சொந்த வீட்டிற்கு வரும்வரையில் நாங்கள் அறிந்த சிறு காரியத்தையே செய்கிறோம், அது எதைப் பொருட்படுத்துகிறதென்றால் ஒரு சிறு ஜெபத்தையேயாகும். ஓ, தேவனே, என்ன…எப்படி—எப்படியாய் நீர் மெய்யானவராயிருக்கிறீர். அந்த நேரத்தில் ஒரு மருத்துவர், “எனக்குத் தெரியாது, அதைப் போன்று செயல்படுகிற எந்த காரியத்தையும் நான் ஒரு போதும் கண்டதேயில்லை” என்று கூறி நடந்து செல்லும்போது, அதன்பின் கர்த்தராகிய இயேசுவே நீர் காட்சியில் அசைவாடுகிறீர். 358 ஓ தேவனே, நீர் எங்களுக்கு மிகவும் உண்மையானவராயிருக்கிறீர், நாங்கள் அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நீர் எங்களுடைய எல்லா சோம்பலான வழிகளையும், எங்களுடைய மதிகெட்ட வழிகளையும் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ, கர்த்தாவே, எங்களை நினைவு கூர்ந்தருளும், அதாவது நாங்கள் ஒரு அந்தகார உலகில், ஒரு அந்த கார உலகத்தின் பாவம் மற்றும் பெருங்குழப்பத்திலும் உள்ள மானிடர்களாய் இருக்கிறோம். நாங்கள் ஒரு திரையினூடாகவே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அது இருந்தவிதமாகவே எங்களுடைய முகத்தின் மேலிருக்கிறபடியால், நாங்கள் கண்டு, அறிந்துள்ளதை மாத்திரமே இங்கே மனித சக்திக்குட்பட்டு செய்கிறோம். ஆனால் என்றோ ஒரு நாள் அந்தத் திரை எடுக்கப்படும்போது, நாங்கள் அறியப்பட்டிருக்கிற வண்ணமாய் முகமுகமாய் உம்மை கண்டு அறிந்துகொள்வோம். அந்த நாளுக்காகவே நாங்கள் வாஞ்சிக்கிறோம். 359 இப்பொழுதும் பிதாவே, ஜனங்களின் வேண்டுகோளின்படி, நாங்கள் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை அளிக்க முயற்சிக்கையில் நீர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களிடத்திலிருந்து எல்லா சுகவீனத்தையும் எடுத்துப் போடும். கர்த்தாவே, நீர் எங்களுக்குத் தேவை. நீர் இதை அருள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய இரக்கங்கள் எங்களுக்கு அருளப்படுவதாக, ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 360 இப்பொழுது கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் நான் தேசத்தில் மிகச் சிறந்தவன் அல்ல என்பதை நீங்களே அறிவீர்கள். ஆனால் என்னுடைய அறிவுக்கெட்டினவரை மிகச் சிறந்த முறையில் பதிலளிப்பேன். 361 அன்றொரு இரவு நான் துவங்கின ஒன்று இங்கே இருந்தது, நான் அதை நிறுத்த வேண்டியதாயிருந்தது: 60. “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” (இந்த கேள்வியில் தான் நான் இருந்தேன் என்பது உங்கள் எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். இப்பொழுது அது உண்மையாகவே 1 கொரிந்தியர் 12-ல் கண்டுபிடிக்கப்பட்டது)…அந்த நேரத்தில் நாம்…புதிய பிறப்பை ஏற்றுக் கொள்கிறோம், இதுவே சம்பவிக்கிறது இது…இது பரிசுத்த ஆவியின் அபிஷேகமா அல்லது பின்னர் பெற வேண்டிய ஒரு ஞானஸ்நானமா, அல்லது இது ஒரு நிரப்பப்படுதலா? 362 இப்பொழுது இது வேறொன்றிற்கும் இடமில்லாத ஒரு கேள்வியாய் உள்ளது, எனவே நாம் அந்த ஒன்றின் பேரில் நம்முடைய நேரத்தை இன்றிரவும், நாளை இரவும் கூட செலவழிக்கக் கூடும். இது நேரத்தை எடுத்துவிடும்…இது—இதை எடுத்து முழு வேதாகமத்துடனும் ஒன்றாக இணைப்போம். ஒவ்வொரு வேதவாக்கியமும் வேதத்தில் உள்ள மற்ற ஒவ்வொரு வேதவாக்கியத்தோடும் சரியாக ஒன்றாக இணைக்கப்பட வேண்டும். 363 ஆனால் அதை சுருக்கமாக. கூற முயற்சிக்கிறேன், அதை எப்படி கூற வேண்டும் என்று நான் அறிந்த முறையில் தெளிவாகக் கூறுகிறேன்; நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அப்பொழுது நீங்கள் புதிய பிறப்பை உடையவராயிருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தரை விசுவாசிக்கும்போது, நீங்கள் ஒரு புதிய சிந்தையை, ஒரு புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறீர்கள், ஆனால் அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமல்ல. புரிகிறதா? நீங்கள் விசுவாசிக்கும்போது, நீங்கள் புதிய பிறப்பை பெற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள். அது தேவன் உங்களுக்கு அளிக்கின்ற வரத்தை ஏற்றுக் கொள்வதனால் இராஜாதிபத்திய கிருபையினூடாக உங்களுக்கு அளிக்கப்படுகிற ஒரு தேவனுடைய வரமாய் உள்ளது. பாருங்கள். “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” நித்திய ஜீவனை உடையவராயிருத்தல்; அது புதிய பிறப்பாய் உள்ளது, நீங்கள் மனமாற்றமடைந்துள்ளீர்கள், அதன் பொருள் என்னவெனில் நீங்கள் “மேலான நிலையில் மாற்றப்பட்டிருக்கிறீர்கள்” என்பதாகும். 364 ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்களை கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக வைத்து, ஊழியத்திற்கான வரங்களுக்கு கீழ்படுத்துகிறது. அது உங்களை ஒரு போதும் ஒரு கிறிஸ்தவனாக்கவில்லையென்றாலும், அது சரீர வரங்களில் உங்களை பொருத்துகிறது. புரிகிறதா? “இப்பொழுது ஒரே ஆவியினால்” (1 கொரிந்தியர் 12) “நாம் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டோம். இப்பொழுது,” பவுல், “வித்தியாசமான வரங்கள் உண்டு, இந்த சரீரத்தில் ஒன்பது வரங்கள் உள்ளன” என்று கூறுகிறான். இந்த சரீரத்தில்…நீங்கள் இந்த வரங்களில் ஒன்றை சுதந்தரித்துக் கொள்ள இந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்க வேண்டும். அவைகள் சரீரத்தினால் உண்டாகின்றன. 365 ஆனால் இப்பொழுது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வதைப் பொறுத்தமட்டில், ஒரு கிறிஸ்தவராயிருக்க வேண்டும், நீங்கள் விசுவாசிக்கிற அந்த நொடிப் பொழுதிலிருந்தே நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள். இப்பொழுது, அது பாவனை விசுவாசமல்ல, அது உண்மையாகவே கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வதாகும்; நீங்கள் சரியாக அங்கே மீண்டும் பிறக்கும் போது, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்கிறீர்கள். அப்பொழுது தேவன் உங்களுக்குள்ளாக வருகிறார். 366 இப்பொழுது கவனியுங்கள், நித்திய ஜீவன்; இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றார். அப்பொழுதே நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். அதன்பின்னர் அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில், அந்த ஜனங்களில் சிலரை பவுல் சந்தித்திருந்தான். அவர்கள் அப்பொல்லோ என்னும் பேர் கொண்ட ஒரு மனமாற்றமடைந்திருந்த நியாய சாஸ்திரியை தங்களுக்கு ஒரு பிரசங்கியாக உடையவர்களாயிருந்தனர். அப்பொல்லோ வேதாகமங்களில் வல்லவனுமாயிருந்து, அவன் இயேசுவே கிறிஸ்து என்று வேத வாக்கியங்களைக் கொண்டு நிரூபித்துக் கொண்டிருந்தான். புரிகிறதா? 367 இப்பொழுது கவனியுங்கள். அப்பொல்லோ வார்த்தையினூடாக, வார்த்தையினாலே நிரூபித்துக் கொண்டிருந்தான். “விசுவாசம் கேட்பதனால், வார்த்தையைக் கேட்பதனால் வரும். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” உங்களுக்கு இது புரிகிறதா? அப்பொல்லோ வார்த்தையினால் இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்துக் கொண்டிருந்தான். அவர்கள் மிகுந்த சந்தோஷத்தை உடையவர்களாய், வார்த்தையை ஏற்றுக் கொண்டிருந்தனர், அதே சமயத்தில் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை மாத்திரமே அறிந்திருந்தனர். 368 பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்த போது, அவன் இந்த சீஷர்களைக் கண்டான், அப்பொழுது அவன், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். புரிகிறதா? 369 இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்கும்போது, இயேசு, “நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள்” என்றார். அதுதான் புதிய பிறப்பு. அதுவே உங்களுடைய மனமாற்றமாய், மாற்றமாய் உள்ளது. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, உங்கள் மூலமாக கிரியை செய்கிற இந்த ஒன்பது ஆவிக்குரிய பிரகாரமான வரங்களுக்கும் கீழ்படியச் செய்கிற தேவனுடைய வல்லமையாய் இருக்கிறது; நீங்கள் இந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படும்போது, பிரசங்கித்தல், சுவிசேஷகர்கள், அப்போஸ்தலர்கள், போதகர்கள், தீர்க்கதரிசிகள் போன்றவை…சரீரத்தின் எல்லா வரங்களும் இதற்குள் உண்டாகின்றன். அது…உங்களை ஒருபோதும் அதற்கு மேலாக ஒரு கிறிஸ்தவராக ஆக்குகிறதில்லை, அது ஜீவனுள்ள தேவனுடைய சபையில் ஒரு பணிவிடை ஆவியாயிருக்கும்படியான ஒரு ஸ்தானத்தில் உங்களை பொருத்துகிறது. இப்பொழுது உங்களுக்கு இது புரிகிறதா? புரிகிறதா? 370 இப்பொழுது கேள்வியானது…நாம் ஒவ்வொன்றாக பதிலுரைப்போம், மூன்று கேள்விகள் உள்ளன. “நாம் எல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டோம்.” அது சரியே, 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரம் அதற்கு பதிலை அளிக்கும். சரி. இது சம்பவிக்கும் அந்த நேரத்திலா நாம் புதிய பிறப்பை பெற்றுக் கொள்கிறோம்? அது எப்பொழுது? 371 அதைத்தான் அவர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள், ஆம்…“ஒரே ஆவியினால்…” இல்லை. இல்லை. “நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்” பாருங்கள், அது புதிய பிறப்பு துவங்கும்போதல்ல, நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்போது புதிய பிறப்பு துவங்குகிறது. 372 இப்பொழுது பாருங்கள், அங்கு ஒரு…ஒரு காரியமும் இல்லை.…இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் விசுவாசிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? நீங்கள் அதைப் பார்க்கிலும் வேறென்ன செய்ய முடியும்? நீங்கள் அதை விசுவாசிப்பதைக் காட்டிலும் அதைக் குறித்து வேறென்ன செய்ய முடியும்? அதைத் தவிர நீங்கள் செய்யக் கூடிய ஒரு காரியத்தைக் கூறுங்கள். அதை விசுவாசிப்பதற்கு புறம்பாக நீங்கள் செய்யக் கூடியது ஒரு காரியமும் இல்லை. இப்பொழுது, உங்களுடைய விசுவாசத்திற்கு புறம்பாக எந்த காரியமாவது உண்டானால், அது உங்களுடைய சொந்த செய்கையாயில்லையென்றால், அது ஒரு தேவனுடைய செயலாய் உள்ளது. ஆகையால்… 373 இப்பொழுது நீங்கள்…அதை நாம் கூறினால்…ஏராளமான நேரங்களில், பரிசுத்த ஆவி என்பது, “அந்நிய பாஷையில் பேசுவதே அதற்கான ஆரம்ப ஆதாரம்” என்று அநேக சமயங்களில் ஜனங்கள் ஏற்றுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் ஜனங்களை குலுக்கி, அல்லது அவர்களை அடித்து, அவர்களைத் தட்டி, “அதைக் கூறு. அதைக் கூறு. அதைக் கூறு” என்கிறார்கள். உங்களுக்குத் தெரியும், ஒரே வார்த்தையை திருப்பித் திருப்பிக் கூறி, “அதைக் கூறு. அதைக் கூறு. அதைக் கூறு” என்கின்றனர். பாருங்கள், அது நீங்களாகவே செய்து கொண்டிருக்கிற ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. அதுவல்ல…அதுவல்ல…அது—அது ஒன்றுமல்ல. நீங்கள் அந்நிய பாஷையின் குழப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏராளமான காரியங்களை, உணர்ச்சிவசப்படுதல்களைப் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் உங்களுடைய சொந்த தனிப்பட்ட விசுவாசத்திற்கு புறம்பேயிருந்து எந்த காரியமாவது உண்டானால், அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தேவனுடைய தெய்வீக வரமாயிருக்க வேண்டும். புரிகிறதா? 374 “நாம் எல்லோரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.” அது சரியே, பாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது புதியப் பிறப்பிலிருந்து ஒரு வித்தியாசமான செய்கையாயிருக்கிறது. ஒன்று ஒரு பிறப்பாயுள்ளது, ஒன்று ஒரு அபிஷேகமாயுள்ளது. ஒன்று உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறது, மற்றொன்று உங்களுக்கு வல்லமையை அளிக்கிறது. அது செயல்படும்படியாக நித்திய ஜீவனுக்குள்ளாக வல்லமையை அளிக்கிறது. பாருங்கள், இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? சரி, சரி. 375 இப்பொழுது இங்கே மற்றொன்று உள்ளது, இரண்டாவதிற்கு வருவோம், இந்த இரவு நான் அறிந்த மிகச் சிறந்த பதில்களைக் கூறியிருந்தேன். 61. இயேசுவினுடைய சரீரம் கல்லறையில் இருந்தபோது, அவருடைய ஆவி மூன்று நாட்கள் எங்கேயிருந்தது? அவருடைய ஆவி எங்கேயிருந்தது? 376 இப்பொழுது, அவருடைய ஆவி, நீங்கள் வேதவாக்கியங்களை பின் தொடர்ந்து பார்பீர்களேயானால்…நல்லது, நாம் அநேக இடங்களைக் கொண்டு வந்து விளக்க முடியும். ஆனால், நான் யாராவது ஒரு வேதத்தை வைத்துள்ளார்களா என்று எதிர்பார்க்கிறேன். சகோதரன் ஸ்டிரிக்கர், நீங்கள் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா? சரி. சகோதரன் நெவில், நீங்கள் ஒன்று வைத்துள்ளீர்களா? சங்கீதம் 16:10 ஐ. எனக்காக எடுங்கள். வேறு யாராவது? சகோதரி உட், நீங்கள் அங்கு ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா? நல்லது, சகோதரன் ஸ்டிரிக்கர் (சரி, யாராவது ஒருவர்), நீங்கள் எனக்கு அப்போஸ்தலர் 2:27, அப்போஸ்தலர் 2:27-ஐ எடுங்கள். 377 இப்பொழுது, முதலாவது, இயேசு மரித்த போது…நீங்கள் மரிக்கும்போது, உங்களுடைய சரீரம் மரிக்கிறது. மரணம் என்ற வார்த்தை “வேறுபிரிதல்” என்று பொருள்படுகிறது, உங்களுடைய அன்பார்ந்தவர்களிடமிருந்து வேறுபிரிக்கப்படுதல் என்பதாகும். ஆனால் இங்கு அவர் இதை பரிசுத்த யோவான், 11-வது அதிகாரத்தில், “கேட்டு…” இல்லை…நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்; அதை பரிசுத்த யோவான் 5:24-ல், “என் வசனத்தைக் கேட்கிறவனுக்கு நித்திய ஜிவன் உண்டு” என்று கூறினார். 378 இயேசு, அவரை சந்திக்க வந்த மார்த்தாளிடம் கூறினார்…அவள், “நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்கு தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன்” என்றாள். 379 அவர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றார். பார்த்தீர்களா? “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்றார்.” 380 இப்பொழுது—இப்பொழுது, நம்முடைய மரிக்காத பாகம் ஒன்று உண்டு. நான் அந்த வேதவாக்கியங்களின் வரிசையினுடாக வந்துள்ளபடியால், ஒரு துவக்கத்தையுடைய ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு முடிவு உண்டு. ஒரு துவக்கமேயில்லாத காரியங்களுக்கு முடிவேயில்லை. ஆகையால் நாம் கிறிஸ்துவை, தேவனை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம், தேவனுடைய ஜீவன் முடிவுற்றதாயிருப்பதுபோல, நம்முடைய ஜீவனும் முடிவற்றதாயிருக்கிறது; நாம் நித்தியத்தைப் பெற்றுள்ளோம். 381 இப்பொழுது, சதாகாலம் என்ற வார்த்தையை, நாம் அதனூடாகச் சென்றுப் பார்த்துள்ளோம். சதாக்காலம் என்ற வார்த்தை “ஒரு குறிப்பிட்ட கால நேரம்” என்பதாய், அதாவது என்றென்றும் (இணையிடைச் சொல்) என்றென்றும் என்பதாய் உள்ளது. அதற்கு—அதற்கு ஒரு முடிவு உண்டு என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம், எல்லா பாடுகளையும், எல்லா சுகவீனங்களையும், எல்லா துயரமும், எல்லா தண்டனைகளையும் போலவே நரகத்திற்குத் தானே ஒரு முடிவு உண்டு. 382 ஆனால் நித்திய ஜீவனுக்கு முடிவேயில்லை. ஏனென்றால் அதற்கு துவக்கமேயில்லாதிருந்தது. அது ஒரு போதும் மரிக்க முடியாது, ஏனென்றால் அது ஒரு போதும் பிறக்கவேயில்லை. அது துவக்க நாட்களை உடையதாயிருக்கவில்லை, எனவே அதற்கு முடிவின் நேரமும் இல்லை. இப்பொழுது, நாம் நித்தியமாய் ஜீவிக்கக் கூடியதற்கான ஒரே வழி நித்தியமாயிருக்கிற ஏதோ ஒரு காரியத்தை ஏற்றுக் கொள்வதன் மூலமேயாகும். எந்த ஒரு காரியமும் இல்லாதிருப்பதற்கு முன்னமே தேவன் இருந்தார், அவர் தேவனாயிருந்தார். தேவன் ஒரு போதும் ஒரு துவக்கத்தையோ அல்லது முடிவையோ உடையவராயிருந்ததில்லை. 383 தேவன் இந்த மகத்தான் ஆவியாயிருந்தார். வானவில்லின் ஏழு நிறங்களைப் போல,…நாம் அவரை வருணித்தோம்…அந்த வானவில் பூமியைத் தொடவில்லையென்றாலும், அது புவி முழுவதையுமே உண்மையாகவே மூடும். அது பூமியின் வளைவின் வட்டத்தில் உள்ள தண்ணீராய் உள்ளது, அதுவே அதை உண்டு பண்ணுகிறது. ஆனால், இப்பொழுது, தேவன் நித்தியமானவராயிருக்கிறபடியால், அவர் பரிபூரணமாயிருந்தார்; பரிபூரண அன்பு, பரிபூரண சமாதானம், பரிபூரண சந்தோஷம், பரிபூரண திருப்தி அந்த ஏழு ஆவிகளையும், (நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் பார்க்கிறோம்), அவைகள் பரிபூரணமாயிருந்த தேவனிடத்திலிருந்து உண்டாயிருந்தன. அதற்கு புறம்பேயிருந்த ஒவ்வொரு காரியமும் அதிலிருந்து தாறுமாறாக்கப்பட்ட ஒரு காரியமாகவே இருந்து வருகிறது. 384 இப்பொழுது நாம் பரிபூரணத்தண்டைக்கு திரும்பி வரக்கூடிய ஒரே வழி அதனண்டைக்கு திரும்பி வருவதேயாகும். (பரிபூரணம், அது தேவனாயிருக்கிறது). ஆகையால் நாம் பரிபூரணத்தண்டைக்கு திரும்பி வர வேண்டுமானால், அப்பொழுது நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்க வேண்டும்; முடிவில்லாதது, அல்லது எந்தக் காரியமும் இல்லாமல்—இல்லாமல், அது என்றென்றும் நித்திய ஜீவனாயுள்ளது. 385 இப்பொழுது அவர் ஆத்துமாவைக் குறித்து…ஆவியைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் நாம் நம்முடைய பரிசுத்தவான்களின் கல்லறைகளுக்கு மேலேயே, இந்த சரீரத்தை, நம்முடைய சரீரங்களை அடக்கம்பண்ண கொண்டு செல்கிறோம். சரீரம்…முதலாவது, தேவன், தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸ்… 386 முன்னமே நான் அதனூடாக பிரசங்கித்துள்ளேன். கத்தோலிக்கரோ, “அதை தேவனுடைய நித்திய குமாரத்துவம்” என்று அழைக்கின்றனர். நான் முன்னமே அதைக் கூறியிருக்கிறதுபோல, அந்த வார்த்தை சரியாக பொருள்படவில்லை. பாருங்கள், நித்திய குமாரனாய் இருக்க முடியாது, ஏனென்றால் ஒரு குமாரனுக்கு ஒரு துவக்கம் இருக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் இயேசுவுக்கு ஒரு துவக்கம் இருந்தது, தேவனுக்கோ ஒரு துவக்கமே இல்லாதிருந்தது. புரிகிறதா? ஆனால் குமாரன்…நித்திய குமாரத்துவத்தையுடையவராயிருக்கவில்லை, ஆனால் பிதாவோடிருந்த குமாரன் ஆதியில் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸாயிருந்தார். 387 அது தேவனிடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஆவிக்குரிய சரீரமாயிருந்தது. அது நீங்கள் காண்கிற கண்களைப் போன்றில்லாமல், ஒரு மேலான கண்ணையுடைய மானிட ரூபம். அது நீங்கள் கேட்பது போன்ற செவிகளைப் பெற்றிராமல், ஒரு தொலை தூரத்தில் உள்ளதையும் கேட்கிற செவியாகும். பாருங்கள், அது ஒரு ஆவிக்குரிய சரீரமாயிருந்தது, அது, இந்த வானவில்லில்லிருந்த யாவும் ஒரு—ஒரு ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாக இறங்கின. அது கன்மலையினூடாக கடந்து சென்ற போது, மோசே அதைக் கண்டான். அவன் பின்பாகத்தைக் கண்டு, “அது ஒரு மனிதனைப் போன்று காணப்பட்டது” என்றான். 388 அவர் மாம்ச சரீரத்திற்குள்ளாக இறங்கி வந்து, கன்றின் மாம்சத்தைப் புசித்து, பாலைக் குடித்து, வெண்ணெய்யைப் புசித்தபோது, ஆபிரகாம் அவரைக் கண்டார். அவர் மாம்ச சரீரத்தில் வந்து, பின்னர் அதிலிருந்து மறைந்து போனதை, ஆபிரகாம் கண்டார். நம்முடைய சரீரங்கள் பூமியின் பதினாறு மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளன என்று நாம் கண்டறிந்தோம், அவைகள் ஒன்று சேர்ந்து உருவாகின. தேவன் அவைகளை ஒன்று சேர்த்து, இந்த சரீரங்களிலேயே இரண்டு தூதர்களையும் உருவாக்கிக் கொண்டு வந்தார். அந்தத் தூதர்கள் நின்று பேசினர். தூதர்கள்…அந்த சமயத்தில் மனிதர்களாயிருந்தனர். 389 இப்பொழுது கவனியுங்கள், மெல்கிசேதேக்கு யாராயிருந்தாரென்றால் தேவன் தாமே என்பதை நாம் கண்டறிகிறோம். அது வேறு யாராகவும் இருந்திருக்க முடியாது, அவர் எருசலேமாயிருக்கிற சாலேமின் ராஜாவாயிருந்தார். அவருக்கு தகப்பனும், தாயும் இல்லாதிருந்தது; ஆகையால் அது இயேசுவாயிருந்திருக்க முடியாது, ஏனென்றால் அவர் தகப்பனும் தாயுமுடையவராயிருந்தார். அவருக்கு நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமில்லாததாயிருந்தது; அதை ஒருவர் மாத்திரமே உடையவராயிருக்கிறார், அது தேவனாகும். அது ஒரு ஆவிக்குரிய சரீரத்திலே இங்கே தேவன் வாசம் செய்து கொண்டிருந்ததாயிருந்தது. புரிகிறதா? கவனியுங்கள், சாலேமின் ராஜா. 390 இப்பொழுது தேவன் காலத்தினூடாக, தம்முடைய ஜனங்களின் மூலமாக, வாழ்ந்து வந்துள்ளார். அது மலையின் மேல் அமர்ந்து, ஒரு புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக அழுத தாவீதுக்குள் இருந்த தேவனாயிருந்தது. அதே ஆவியானது தாவீதின் குமாரனாகிய இயேசுவுக்குள் வெளிப்படுத்தப்பட்டது, அவர் எருசலேமில் புறக்கணிக்கப்பட்டு அழுதார். 391 யோசேப்பு, தன்னுடைய தகப்பனால் நேசிக்கப்பட்டு, தன்னுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டு, முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்தில் உட்காரவைக்கப்பட்டான், யோசேப்பினாலன்றி…வேறு எந்த மனிதனாலும் பார்வோனண்டை வர முடியாது, எக்காளம் ஊதப்பட்ட போது, யோசேப்புக்கு தெண்டனிட்டுப் பணிந்தனர்; கிறிஸ்துவிற்கு பரிபூரண மாதிரி. அதுவே அந்த மனிதர் மூலமாக ஜீவித்த கிறிஸ்துவின் ஆவியாயிருந்தது. புரிகிறதா? 392 இப்பொழுது, இப்பொழுது இங்கே இயேசுவானவர் மரித்தபோது, அது மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனாயிருந்தது. தேவன் மனிதனானார். மீட்பின் பிரமாணங்களில், இஸ்ரவேலில் இழந்த சொத்தை மீட்கக் கூடிய ஒரு மனிதனுக்கு ஒரே வழி மாத்திரமே இருந்தது, அதாவது அவன் ஒரு இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. அவன் ஒரு நெருங்கின இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. ரூத்தின் புத்தகம் அதை அழகாக விவரிக்கிறது; அவன் ஒரு இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் தேவனுக்கு மனிதன் நெருங்கிய இனத்தானாகும்படி தேவன் மனிதனுக்கு நெருங்கிய இனத்தாராக வேண்டியதாயிருந்தது. புரிகிறதா? 393 அவர் அவனுக்குள் ஒரு ஆவியை உடையவராயிருக்கிறார், ஒரு மனிதன் பிறக்கும்போது அவன் செய்கிற காரியம், ஏனென்றால் அது ஒரு ஜென்மசுபாவமான ஆவியாயிருக்கிறது. அது ஒரு உலகத்தின் ஆவியாயிருக்கிறது, அது இப்பிரபஞ்சத்தின் தேவனுடைய ஆவியாயிருக்கிறது. அவன் வெறுமனே ஆதாமின் ஒரு கர்ப்பப்பிறப்பாயிருக்கிறான். 394 ஒரு மரம் தானே பிரதியுற்பத்தி செய்து கொள்கிறது. தாவரம் தானே பிரதியுற்பத்தி செய்துகொள்கிறது. மிருகங்களும் தங்களை பிரதியுற்பத்தி செய்துகொள்கின்றன. மானிடர்கள் தங்களை பிரதியுற்பத்தி செய்து கொள்கின்றனர். அவர்கள் மூல சிருஷ்டிப்பின் உப உற்பத்தியாயிருக்கிறார்கள். இது புரிகிறதா? 395 இப்பொழுது, இப்பொழுது ஒரு மனிதன் பிறக்கும்போது, அவன் இந்த உலகத்தின் ஆவியை தனக்குள் கொண்ட ஒரு ஆவியோடு பிறக்கிறான். அந்தக் காரணத்தினால்தான் அவன் மீண்டும் பிறக்க வேண்டியவனாயிருக்கிறான். ஏனென்றால் இந்த ஆவி தந்தை, தாயின் மூலம் கருத்தரித்தலிருந்து வருகிறது, அது பாலியல் கருத்தரித்தலாயிருந்தது, எனவே அது முற்றிலும் என்றென்றுமாய் ஜீவிக்க முடியவில்லை. ஆகையால் அவன் மீண்டும் பிறக்க வேண்டும். அவன் அதைச் செய்ய முடிந்ததற்கு முன்னே, தேவன் இறங்கி வந்து மீண்டும் பிறப்பதற்கு அவனுக்காக ஒரு வழியை உண்டுபண்ண வேண்டியதாயிருந்தது; ஏனென்றால் அவன் தன்னை மீட்டுக் கொள்ள அவனுக்கு வழியேயில்லாதிருந்தது, அவன் நம்பிக்கையில்லாதவனாயிருந்தான். அவன்…நம்பிக்கையில்லாமல், தேவனில்லாமல், கிறிஸ்துவில்லாமல், இந்த உலகத்தில் இழக்கப்பட்டுப் போய்விட்டான். அவனால்—அவன்…அவன் தன்னை இரட்சித்துக் கொள்ள ஒன்றுமேயில்லாததாயிருந்தது. அவன்…ஒவ்வொரு…அவன் ஒரு பிரதான ஆசாரியனாயிருந்தாலும், அவன் ஒரு கண்காணியாயிருந்தாலும், அவன் ஒரு போப்பாண்டவராயிருந்தாலும், அவர் என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன் அடுத்த மனிதனைப் போலவே குற்றவாளியாயிருக்கிறான். 396 ஆகையால், அதைச் செய்ய குற்றமில்லாத ஒருவர் தேவையாயிருந்தது. எனவே தேவன் ஒருவர் மாத்திரமே குற்றமில்லாதவராயிருந்தார். தேவன் நம்மை மீட்கும்படியாக மரணத்தின் கொடுக்கை எடுத்துப் போட, மரணத்தின் கொடுக்கை நங்கூரமிட, தேவன் இறங்கி வந்து மனிதனாக வேண்டியதாயிருந்தது (அவர் கிறிஸ்துவின் ரூபத்தில் வந்தார்), அதாவது நாம்…நம்முடைய கிரியைகளினால் அல்ல அல்லது நம்முடைய நற்குணத்தினாலும் அல்ல, (நம்மிடத்தில் ஒன்றுமே இல்லை), ஆனால் அவருடைய கிருபையினால் இரட்சிக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆகையால் நாம் இந்த அழிவுள்ள சரீரத்தில் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறோம், இப்பொழுது நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருந்து, நமக்குள்ளே நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறோம். ஆகையால், இயேசு, உயிரோடிருக்கிறவராய்… 397 எந்த மனிதனுமே எவ்வளவு பொல்லாங்கனாயிருந்தாலும் அல்லது எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல…அவன் இந்த பூமியைவிட்டுச் செல்லும்போது, அவன் மரிப்பதில்லை, அவன் வேறெங்கோ இருக்கிறான். ஆனால் அவன் அழிந்துபோகும் ஒரு ஜீவனை உடையவனாயிருக்கிறான், அவன் நரகத்தில் அவனுடைய செய்கைகளுக்காக தண்டிக்கப்பட்டபிறகு, அவன்…ஆனால் அதே சமயத்தில் அந்த ஜீவன் அழிந்து போய்விடும். ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு. 398 இப்பொழுது, நாம் அதனூடாகச் சென்று பார்த்துள்ளோம். ஒரு மனிதன் ஒரு பாவியாயிருந்து, என்றென்றுமாய் தண்டிக்கப்படுவானானால்…அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தாலொழிய, அவன் என்றென்றுமாய் தண்டிக்கப்பட முடியாது. அவன் நித்திய ஜீவனை பெற்றிருந்தால், அவன் இரட்சிக்கப்பட்டிருப்பான். புரிகிறதா? ஆகையால் ஒரே ஒரு மாதிரியான நித்திய ஜீவன் தான் உண்டு, அது ஸோயீ என்ற “தேவனுடைய ஜீவனாய்” உள்ளது. எனவே அவன் அழிந்து போகமுடியாது. 399 ஆனால் துன்மார்க்கர் கடைசி நாளில் அவர்களுடைய நியாயத்தீர்ப்பிற்காக (சரீரத்தில் செய்திருந்த கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்பட) ஒரு வேதனைக்குரிய இடத்தில் காத்திருக்கிறார்கள். இப்பொழுது, ஆனால் நாம்…சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருக்கும், சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின் தொடரும். 400 இப்பொழுது நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்தால், அவர் நமக்கு அதை அப்படியே மன்னிக்கிறார், ஆகையால் நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் ஒருபோதும் நிற்பதில்லை. உங்களுக்கு இது புரிகிறதா? பாருங்கள். ரோமர் 8:1, “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” என்று கூறுகிறது. அதாவது கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்கள். அதாவது மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்; பாருங்கள், நாம் கிறிஸ்துவுக்குள்ளிக்கிறபடியால் ஆக்கினைத் தீர்ப்பேயில்லை. “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு.” புரிகிறதா? “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” 401 நான் கிறிஸ்துவுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்து, கிறிஸ்து என்னுடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக் கொண்டிருக்க, நான் என்னுடைய பாவங்களுக்காக அவருடைய கிருபாதாரபலியை ஏற்றுக் கொண்டிருந்தால், தேவன் என்னை எப்படி நியாயந்தீர்க்க முடியும்? அவர் கிறிஸ்துவை நியாயந்தீர்த்தபோது, அவர் என்னை நியாயந்தீர்த்துவிட்டார். அதன்பின்னர் நான் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாயிருக்கிறேன். “அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்.” புரிகிறதா? 402 ஆனால், இப்பொழுது, துன்மார்க்கர் அவ்வண்ணமாயிருப்பதில்லை. அவன் வேதனையான ஒரு இடத்திற்குள்ளாகச் செல்கிறான். அது உண்மை என்பதை நாம் அறிவோம். துன்மார்கன் உயிரோடிருக்கிறான். அவன் ஒரு வேதனையான இடத்தில் இருக்கிறான். அவன் ஒரு இடத்தில் இருக்கிறான், அங்கே அங்கே…அறிவதில்லை. அப்படித்தான் இந்த இறந்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் ஆவியுலக இடையீட்டாளர்கள் இறந்து போயிருக்கிற ஜனங்களின் ஆவிகளை அழைக்கிறார்கள், நீங்கள் அதைக் குறித்த எதையாவது எப்போதாவது பார்த்திருப்பீர்களேயானால், அது ஒரு விதமான கும்மாளமும், அசுத்தமான கேலிப் பேச்சுகளுமாய், அவர்கள் செய்கிற கிறுக்குத்தனமான காரியங்களாய் இருக்கின்றன. சரி. ஏன்? அவர்கள்… 403 டானி மார்டினின் அற்புதம் என்ற என்னுடைய கட்டுரை வெளிவருவதற்கு முன் வெளிவந்த இந்த செல்வி பைப்பர் என்ற கட்டுரையைப் பாருங்கள். எத்தனைபேர் அந்தக் கட்டுரையை வாசித்திருக்கிறீர்கள்? ஆம், நிச்சயமாகவே உங்களில் அநேகர் வாசித்திருக்கிறீர்கள். அது ரீடர்ஸ் டை ஜிஸ்ட் என்ற பத்திரிக்கையில் உள்ளது. இந்த அற்புதத்திற்கு முன்னர் செல்வி பைப்பர் என்பவளைக் குறித்து வெளியானதை நீங்கள் கவனித்தீர்களா? அவள் உலகத்திலேயே மிகப்பெரிய ஆவியுலக இடையீட்டாளாராக அறியப்பட்டிருக்கிறாள். அவளுடைய கதை பன்னிரண்டு பக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஐம்பது வருடங்களாக…அவள் உலகம் முழுவதும் சென்று செய்ததை, அதாவது, “அவள் மரித்தோரோடு முற்றிலும் பேசுவதையும், மரித்த ஜனங்கள் எழும்பி வருவதையுங் குறித்த” விஞ்ஞான நிரூபணம் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அப்பத்திரிக்கையாளார்கள் வைத்துள்ளனர். என்ன? தேவனுடைய பெயர் ஒருமுறையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை, எந்த மனந்திரும்புதலைக் குறித்தும், தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும், அதைக் குறித்த எதையுமே ஆவியுலத் தொடர்பு இடையீட்டில் குறிப்பிடப்படவில்லை, பாருங்கள். 404 அதில் இருந்த ஒரேக் காரியம், “ஜான், உனக்கு என்னைத் தெரியவில்லையா? ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த அந்த ஜார்ஜ் நான் தான், நான் இன்ன—இன்ன, இன்ன—இன்ன காரியத்தைச் செய்தேன். நாம் சென்று இதைச் செய்த அந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று அந்த ஜனங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தனர். பாருங்கள், அவர்கள் அறிந்திருப்பது எல்லாம் அவ்வளவுதான். அவர்கள் மரித்துப் போய்விட்டனர்…கடந்து போய்விட்டனர். அவர்களுக்கு—அவர்களுக்கு நியாயத்தீர்ப்பேயன்றி வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. 405 மரமானது சாய்கிறவிதமாகவே, அந்த விதமாகவே அது விழுகிறது. நீங்கள் மரிக்கும் நிலையில்…அந்தக் காரணத்தினால்தான் நான் மரித்தோருக்காக ஜெபிப்பதில் கருத்து வேற்றுமைக் கொள்கிறேன், பாருங்கள், பரிந்துரை பிராத்தனைகள் அல்லது—அல்லது மரித்த பரிசுத்தவான்களோடு கலந்துரையாடுதல் போன்றவற்றோடு கருத்து வேறுபாடு கொள்கிறேன். அது தேவனுடைய வார்த்தையின்படியிருக்க முடியாது. மரித்தப் பிறகு எந்த ஒரு நபருக்காகவும் ஜெபிப்பது எந்த ஒரு நன்மையும் செய்கிறதில்லை. அவர்கள் முடிவுற்றுவிட்டனர். அவர்கள்—அவர்கள்…அவர்கள் இரக்கத்திற்கும் நியாயத்தீர்ப்பிற்குமிடையேயுள்ள கோட்டை கடந்துவிட்டனர். அவர்கள் இரக்கத்தண்டை சென்றிருக்க வேண்டும் அல்லது இரக்கத்திலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். இயேசு பரிசுத்த மத்தேயு 16-ம் அதிகாரத்தில் அவ்வண்ணமாய்க் கூறினார், அவர்—அவர்—அவர் அதைப் போதித்தார்; மாற்கு 16-வது அதிகாரத்தில் அது உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஐஸ்வரியவானும் லாசருவும். எந்த மனிதனும் இந்தப் பிளவைக் கடந்து வர முடியாது, ஒரு போதும் இதைக் கடப்பதில்லை. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. புரிகிறதா? ஆகையால் அதுவே இதனைத் தீர்க்கிறது. 406 இப்பொழுது, ஆனால் கிறிஸ்து மரித்தபோது, அவர் கிறிஸ்துவாயிருந்தார் என்று ஒவ்வொரு காரியமும் சாட்சி பகர வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நாம் உங்களுடைய கேள்விக்குச் செல்வோம். முதாலவது காரியம், நட்சத்திரங்கள் ஒளிகொடுக்க மறுத்துவிட்டன, சூரியன் அஸ்தமித்துவிட்டது, சந்திரனும் தன்னுடைய ஒளியைக் கொடுக்கவில்லை, பூமியானது அவருடைய மரணத்திலே அதனுடைய கற்பாறைகளை வெண்மையாக்கிற்று. அவர் காவலிலிருந்த ஆத்துமாக்களுக்கு சென்று பிரசங்கித்தார், அவை நோவாவின் நாட்களில் தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தபோது, மனந்திரும்பாமற்போனவைகள். அவைகள் அவரை அடையாளங்கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது. அதை கவனியுங்கள்! நீ இன்றிரவு இங்கே தற்செயலாக ஒரு பாவியாயிருந்தால், ஒரு நிமிடம் அதைக் குறித்து சிந்தித்துப் பார். இன்றிரவு இப்பொழுது பிரசங்கிக்கப்படுகிற இந்த சுவிசேஷத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிற நீ என்றோ ஒரு நாள் இதற்கு சாட்சியாய் இருக்க வேண்டியதாயிருக்கும். நீ யாராயிருக்கிறாய் என்பதை பொருட்படுத்தாமல், நீ எங்கேயிருந்தாவது உன்னுடைய முழுங்காலை முடங்க செய்வாய். அது இன்றிலிருந்து ஒருகால் பத்தாயிரம் வருடங்கள் கழித்து நடக்கலாம், அது…இந்த காலையில் இல்லாமலிருக்கலாம். அது எப்பொழுதாயிருந்தாலும், நீ எங்காவது முழங்காலை முடக்கப் போகிறாய், இதே மாறாத சுவிசேஷம் திரும்பவும் உனக்கு பிரசங்கிக்கப்படுவதை நீ கேட்கப் போகிறாய். 407 காவலில் இருந்த அந்த ஆத்துமாக்கள் ஏனோக்கும், அவர்கள் எல்லோரும், நோவாவும் பிரசங்கித்தபோதும் மனந்திரும்பாமல் இருந்தன, இப்பொழுது உள்ளதைப் போன்று தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, அந்த நேரம் வருவதற்கு காத்துக் கொண்டிருந்தார். நோவாவும், ஏனோக்கும், அவர்கள் எல்லோருமே பிரசங்கித்தபோதும் அந்த ஜனங்கள் நகைத்து, அவர்களைக் குறித்து பரியாசம் செய்தனர். அவர்கள் காவல் வீட்டில் இருந்தனர், இயேசு காவலிருந்த ஆத்துமாக்களண்டைச் சென்று பிரசங்கித்தார். அவர் சாட்சி பகிர்ந்தாரே! வானங்களும், “அவர் இங்கு இருந்தார்” என்று சாட்சிப் பகர்ந்தன. பூமியும், “அவர் அங்கு இருந்தார்” என்று சாட்சி பகர்ந்தன. பாதளமும், “அவர் அங்கு இருந்தார்” என்று சாட்சிப் பகர்ந்தனர். 408 வேதம் அதைக் கூறினது…அநேக ஆண்டுகளுக்கு முன்னர், தாவீது, சங்கீதங்களில்…சரி, சகோதரனே, நீங்கள் அதைப் படிக்க விரும்பினால், நீங்கள் சங்கீதங்களை வாசித்துப் பாருங்கள். சங்கீதம் 16:10 [சகோதரன் நெவில் வாசிக்கிறார், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் வீடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்”—ஆசி.] 409 சகோதரனே, பேதுரு பிரசங்கத்ததில் உள்ள அதே காரியத்தை அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து வாசியுங்கள்: [சகோதரன் ஸ்டிரிக்கர், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று வாசிக்கிறார்.—ஆசி.] 410 சகோதரனே நீங்கள் அதனுடைய கட்டத்தை—கட்டத்தை புரிந்து கொள்ளும்படி, அதற்கு மேலே உள்ள இரண்டு வசனங்களை வாசியுங்கள்: [சகோதரன் ஸ்டிரிக்கர் வாசிக்கிறார், “அவரைக் குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்குமுன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்.”—ஆசி.] 411 இப்பொழுது அடுத்த வசனத்தையும் வாசியுங்கள்: [சகோதரன் ஸ்டிரிக்கர் வாசிக்கிறார், “ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.”—ஆசி.] 412 ஆம், கவனியுங்கள். இப்பொழுது, என்னுடைய யேகோவா சாட்சிகள் உபதேசத்தை சார்ந்த நண்பனே, நான் அதைக் குறித்து உங்களைக் கேள்விகேட்க விரும்புகிறேன். புரிகிறதா? நரகம்,…பாதாளம், மாண்டாரின் கீழ் உலகு என்ற ஒரு இடம் இருக்குமாயின், நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்பினாலும் சரி; அது கல்லறையிலேயே நிறுத்திவிடுமானால், அப்பொழுது அவர், “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” என்று ஏன் கூறினார்? அதைக் குறித்து என்ன? புரிகிறதா? 413 இங்கே அவருடைய சரீரம் கல்லறையில் இருந்தது; அவருடைய ஆத்துமா பாதாளத்தில் இருந்தது, உயிரோடு பிரசங்கித்துக் கொண்டிருந்தார்! அதைக் குறித்து என்ன? அவர் மீண்டும் தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். அவருடைய ஆத்துமா ஆவிக்குரிய சரீரத்திலிருந்த ஜனங்களோடு கூட அங்கே இருந்தது. அவர் அவர்களுக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருந்தார், அவர்கள் “நீடிய பொறுமையோடே தேவன் காத்திருந்தபோது, மனந்திரும்பாமற்போனவர்கள்.” 414 அவர்…வேறு வார்த்தைகளில் கூறினால், அவர் வாசலைத் தட்டினர். அப்பொழுது கதவானது சுழன்று திறந்தது, அங்கே மனந்திரும்பியிருந்த எல்லா ஆத்துமாக்களும் இருந்தன. அவர், “நான் தான் அந்த ஸ்திரீயின் வித்து, இங்கே ஏனோக்கு கூறியிருந்த ஒருவர் நான் தான்…” என்றார். அங்கே பரதீசில், அது மற்றொரு இடம். இப்பொழுது அந்த மூன்று ஸ்தலங்களையும் ஒரு போதும் மறந்துவிடாதீர்கள்; துன்மார்க்கரின் ஸ்தலம், நீதிமான்களின் ஸ்தலம் மற்றும் நரகமுமே. புரிகிறதா? 415 பரலோகத்தைக் குறித்த திரித்துவத்தைப் போன்றே: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போன்றே; மிருகத்தைக் குறித்த திரித்துவத்தைப்போல; கள்ளத் தீர்க்கதரிசி, மிருகம், மிருகத்தின் முத்திரை. அவை யாவும், நினைவிருக்கட்டும், அவை யாவும் திரித்துவத்தில் உள்ளன. திரித்துவம் ஒன்றாகி, பரிபூரணப்பட்டது. ஒன்றாய் பரிபூரணப்படுத்தப்பட்டது. நீங்கள் மூன்றில் ஒன்றாய் பரிபூரணப்படுத்தப்படுகிறீர்கள்: ஆத்துமா, சரீரம், ஆவி; தண்ணீர், இரத்தம், மற்றும் நரம்புகள். பாருங்கள், நீங்கள் என்னவாயிருந்திருந்தாலும், பரிபூரணமாக்கப்பட்ட ஒன்றாக ஆவதற்கு உங்களுக்கு மூன்று தேவைப்படுகிறது. ஒரு மும்முனை கொண்ட கண்ணாடி துண்டை எடுத்து, அதன் மேல் சூரிய வெளிச்சம் படும்படிச் செய்தால், அப்பொழுது நீங்கள் ஒரு பரிபூரணமான வானவில்லைப் பெற்றுக் கொள்வீர்கள். பாருங்கள், ஒவ்வொரு காரியமும், நீங்கள் ஒன்றை பரிபூரணப்படுத்த மூன்றினை உடையவர்களாயிருக்க வேண்டும். 416 இப்பொழுது, அது நினைவிருக்கட்டும், அவர் மரித்த போது, அவர் முதலில் காவலில் இல்லாத…காவலிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்கச் சென்று, அவர், “ஸ்திரீயினுடைய வித்தாயிருந்தார்” என்று சாட்சி பகர்ந்தார். அவர், “ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவாங்களோடுங்கூட வருபவராக ஏனோக்கு கண்டவராக” இருந்தார். நோவாவினால், ஏனோக்கினால், நீதிமான்களினால் பிரசங்கிக்கப்பட்டிருந்த வேதவாக்கியங்களுக்கு அவர் சாட்சி பகர்ந்து, “அவர்தான் அந்த ஒருவராயிருந்தார்” என்று கூற வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு காரியமும் அதை அடையாளங் கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது. 417 அதன்பின்னர் அவர் பாதாளத்திற்குள் இறங்கி, மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை பிசாசினிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். 418 பரதீசிக்குள்ளாக திரும்பி வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இன்னும் மற்றும் நீதிமான்களை வெளியே கொண்டு வந்தார்; அவர்கள் உயிர்த்தெழுந்தனர் (மத்தேயு 27), அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்து, நரகத்திற்குள் பிரவேசித்து, வீதிகளினூடாக ஜனங்களுக்குக் காணப்பட்டனர். அல்லேலூயா! அங்குதான் காரியமே உள்ளது! 419 இப்பொழுது, ஆனால் அவருடைய சரீரம்…அவருடைய ஆத்துமா இங்கே இழக்கப்பட்டவர்களுக்கு சாட்சி பகர்ந்து கொண்டிருக்கையில், அப்பொழுது அவர் இங்கே கீழே பிசாசினிடத்திலிருந்து திறவு கோல்களை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து, ஆபிரகாம் ஈசாக்கை வெளியேக் கொண்டு வந்தார்; அவருடைய ஆத்துமா…அவருடைய ஆத்துமா அங்கே அதைச் செய்து கொண்டிருந்தது, அவருடைய சரீரம் கல்லறையில் கிடத்தப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தினால் இயேசு கூறினார்…ஜனங்கள், “இயேசு, ‘மூன்று நாளைக்குள்ளே நான் இதை எழுப்புவேன். மூன்று நாளைக்குள்ளே நான் எழுந்திருப்பேன்’ என்று ஏன் கூறினார்? அவர்—அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரித்து, ஞாயிறு காலை உயிர்த்தெழுந்தாரே” என்று கூறுகிறார்கள். 420 ஆனால் அது “மூன்று நாளைக்குள்ளே” என்று இருந்ததைக் கவனியுங்கள், நீங்கள் கிரேக்க வேதாகம அகராதியில் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். தாவீது அபிஷேகத்தின் கீழிருந்து (பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழிருந்து), “உம்முடைய பரித்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறினான் என்பதை அவர் அறிந்திருந்தார். அது அவருக்கு உரித்ததாயிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது அவரைப் பொருட்படுத்தினது என்பதை அவர் அறிந்திருந்தார். அவரே தேவனுடைய பரிசுத்தராயிருந்தார், அழிவு எழுபத்தி இரண்டு மணி நேரத்திற்குள் துவங்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மூன்று நாட்களுக்குள் எங்கோ ஓரிடத்திலிருந்து அழுகத் துவங்குமுன், அவர் அங்கிருந்து மீண்டும் வந்து விட்டார், ஏனென்றால் வேதவாக்கியங்கள் தவறிப்போக முடியாது. 421 அங்குள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் எனக்கு உரியதாயிருக்கிறது, உங்களுக்கு உரியதாயிருக்கிறது, அது நம்முடையதாயிருக்கிறதே!. 422 அவர், “நீங்கள் இந்த சரீரத்தை அழித்துப் போடுங்கள், நான் அதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவேன்” என்றார். ஏனென்றால் அவர், “என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறியிருந்தார். 423 மூன்று நாளைக்குள்ளே அந்த சரீரம் அங்கிருந்து வெளியே வந்துவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் மூன்று நாட்கள் முழுமையாக தங்கியிருக்கவில்லை. இல்லை ஐயா, அவர் நிச்சயமாக தங்கியிருக்கவில்லை. அவர் வெள்ளிக் கிழமை பிற்பகலிருந்து ஞாயிறு காலை வரையில் தரித்திருந்தார், அந்த சரீரத்தின் ஒரு உயிரணு கூட அழிந்து போக முடியவில்லை. 424 அவர் மரித்து, தைலமிடப்பட்டு…இல்லை துணியில் சுற்றப்பட்டு ஒரு கல்லறையில் கிடத்தப்பட்டார். அந்த உஷ்ணமான, ஈரப்பசை கொண்ட தேசத்தில் ஒரு சில மணி நேரத்திலே அவர் அழுகிப் போயிருக்கலாம். நீங்கள் அழுக…அழுகிப் போகும்போது, உங்களுக்குத் தெரியும், அந்த உஷ்ணமும், ஈரப்பசையுமான தேசத்தில் அவருடைய சரீரம், அவருடைய மூக்கு உள்ளேயே அழுகி விழுந்து போக இன்னும் மற்றவைகளும் அழுகிவிடும். அது அழிந்து போயிருந்திருக்கும், ஏனென்றால் அது ஒரு சரீரமாய் இருந்தது. ஆனால் அந்த உயிரணு அழுகுவதற்கு முன்பே, தேவன் தீர்க்கதரிசியாகிய தாவீது மூலம், “உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்று கூறியிருந்ததை அவர் அறிந்திருந்தார். 425 அவர் எப்படியாய் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அதைக் கொண்டு ஜீவித்தார். இப்பொழுது, அங்கிருந்த ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் அவருக்கு உரித்தானதாயிருந்தது, அவைகள் ஒவ்வொன்றையும் தேவன் நிறைவேற்றினார். ஒவ்வொரு வாக்குத்தத்தமும் விசுவாசிக்கு உரித்தானதாயிருக்கிறது, தேவன் அதனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்ததையும் நிறைவேற்றுவார். ஆமென். அது சத்தியமாயிருக்கிறது என்று அப்படியே உறுதியாக இளைப்பாறுங்கள். ஆமென் ஆகையால், அவருடைய ஆத்துமா… நீங்கள் இதை நினைக்கிறீர்களா…இல்லை. என்னை மன்னிக்கவும். இயேசுவினுடைய சரீரம் கல்லறையிலிருந்த மூன்று நாட்களில் அவருடைய ஆவி எங்கேயிருந்தது? 426 அவருடைய ஆவி பாதாளத்தில், தாழ்விடங்களில் இருந்தது. அவர் உயிர்த்தெழுந்தார். உங்களுக்கு அதிக உதவியாய் இருக்கும்படிக்கு நான் இங்கு ஒரு சிறு—சிறு செய்தியை சேர்த்து கூறுவேனாக. அவர் உயிர்த்தெழுந்தபோது, அவருடைய…அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் இன்னமும் மீட்பின் பணியை முற்றிலும் முடித்துவிடாமலிருந்தார். அது உண்மை. அவர் முழு காரியத்தையும் சுத்திகரிக்க வேண்டியதாயிருந்தது, கிரயமோ செலுத்தப்பட்டிருந்தது, ஆனால் பாதாளத்தின் பேரச்சமும், அந்த கல்லறையின் பேரச்சமும்…இங்கே, அவர்—அவர் மரித்தபோது, அவர் தொடர்ந்து ஊழியம் செய்தார். அவர் மரித்தபோது, அவர் ஒருபோதும் ஊழியத்தை நிறுத்திவிடவில்லை, அவர் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தார்…?…என்னுடைய விநோதமான நடிப்பிற்காக என்னை மன்னிக்கவும், நான் யூகிக்கிறேன், ஆனால் அவர் ஒருபோதும் ஊழியத்தை நிறுத்த வில்லையே! 427 நீங்கள் ஒருபோதும் மரிப்பதில்லையே! உங்களுடைய சரீரம் கொஞ்சகாலம் இளைப்பாறாலாம், ஆனால் தேவன் அதை எழுப்புவார், அவர் எழுப்புவதாக வாக்குப் பண்ணினார். தேவனால் அழிந்து போக முடியாதது போல நீங்களும் ஒரு போதும் அழிந்து போக முடியாது. அது உண்மை. பாருங்கள், அவருடைய…அவர் மரித்தப் பிறகு, என்ன…சிஷர்களுக்கோ மரித்துவிட்டார். அவர் என்னவாயிருந்தாரென்றால், அவர் நித்திரையாயிருந்தார். அவர், “நான் போய் லாசருவை எழுப்புவேன்” என்று அவனைக் குறித்து கூறினது போல, அவர்கள் அவரை நித்திரைக்குட்படுத்தினர். தேவன் அவரை எழுப்ப வேண்டியதாயிருந்தது. 428 பாருங்கள், அவர் தொடர்ந்து சென்றார், அவர் தொடர்ந்து பிரசங்கித்தார். அவர் இங்கே காவலிருந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கித்தார். நேராக பாதாளத்திற்குச் சென்று பிசாசினிடத்திலிருந்து திறவு கோல்களைப் பறித்துக் கொண்டார். மீண்டும் திரும்பி வந்து, பரதீசில் மீண்டும் பிரசங்கித்துவிட்டு, மீண்டும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். தம்முடைய சீஷர்களோடு நாற்பது நாட்கள் விஜயம் செய்தார். நாற்பதாம் நாளின் முடிவிலே அவர் மேலேறிச் சென்றார்; ஏனென்றால் நம்மை அழித்துகிற ஒவ்வொரு காரியத்தையும், மூட நம்பிக்கைகளையும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும்…அவர் ஒவ்வொரு மூட நம்பிக்கையையும், ஒவ்வொரு சந்தேகத்தையும் துண்டித்து, அவருடைய பரமேறுதலில் பூமியிலிருந்து மகிமைக்கு ஒரு ஜெபக் கயிற்றை உண்டாக்கினார். உன்னத்திற்கு ஏறி தம்முடைய மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார். ஜெயங்கொண்டாரே! மகத்தான ஜெயவீரர், முற்றிலுமாக. மரணத்தால் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லையே! பாதாளத்தால் அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லையே! புவியால் அவரைப் பிடித்து வைக்க முடியவில்லையே! 429 அவர் பூமியின்மேலிருந்தபோது, அவர்…அவர் மிக இழிவான பட்டிணத்திற்கும், இழிவான ஜனங்களிடத்திற்கும் சென்றார், மிகவும் இழிவான பெயரிடப்பட்டார். அதைத்தான் மனிதன் அவருக்கு செய்திருந்தான். அவர் மிக இழிவான எரிகோ பட்டிணத்திற்கு சென்றார். மிக குள்ளமான மனிதன் ஒரு மரத்தில் ஏறி அவரை கீழ் நோக்கிப் பார்க்க வேண்டியதாயிருந்தது. அந்நிலையில்தான் மனிதன் அவரை வைத்தான். அவர் மிக இழிவான பணியாயிருந்த பாதம் கழுவும் பணியாளாயிருந்தார். அவர் தாழ்ந்தவரானார். அவருக்கு, பெயல்செபூல், “பிசாசுகளின் தலைவன்” என்ற இழிவான பெயரை சூட்டி, இழிவான இடத்தை அளித்து, பாதாளத்தின் தாழ்ந்த இடத்திற்கு தாழ அவரை அனுப்பினான். 430 தேவனோ அவரை எழுப்பி, வானங்களுக்கு மேலாக உன்னதத்திற்கு அனுப்பி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அளித்தார். அல்லேலூயா! அதுமட்டுமின்றி, அவர் பரலோகத்தைக் காண கீழ் நோக்கிப் பார்த்திருந்திருப்பார். உம்முடைய சிங்காசனம் வானாதி வானங்களுக்கு மேலாக உயர்ந்திருக்கிறது. பரலோகத்திலும் பூலோகத்திலும் யாவுமே அவருக்கு கட்டுப்பட்டிருக்கின்றன…எப்போதும் இருந்திராத மகத்தான நாமம் அவருக்கு அளிக்கப்பட்டது. அதைத்தான் தேவன் அவருக்குச் செய்தார். மனிதன் அவரை இழிவான் நிலையில் வைத்தான், தேவனோ அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார். அவர் தாழ்விலிருந்து உன்னதத்திற்கு உயர்த்தப்பட்டார். 431 அவர் நம்மை உயர்த்தும்படிக்கு அவர் தாழ்மையுள்ளவரானார். நாம் அவருடைய கிருபையினூடாக அவரைப் போலாகும்படிக்கு, தேவனுடைய குமாரராகும்படிக்கு அவர் நம்மைப் போலானார். அந்நிலைக்கே அவர் சென்றார். ஆமென்! அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. நாம் வரும்படியான ஒரு வழியை உண்டு பண்ணி, என்றோ ஒரு நாளில், “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்றார். 432 ஓ, வியப்பொன்றுமில்லையே…மனிதன் அந்த தரிசனத்தைப் புரிந்து பற்றிக் கொள்ளும்போது, அதை விளக்கிக் கூறக் கூடிய மனிதன் ஒருபோதும் இருந்ததேயில்லை. அவர்கள் அதை விளக்கிக் கூற முயற்சித்து தங்களுடைய சிந்தையை இழந்துவிட்டனர்; இந்த மகத்தான பாடல்: “ஓ தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமும் சுத்தமுமானது; எவ்வளவு ஆழங்காணவியலாததும், வல்லமையுமானது.” அந்தச் செய்யுளின் கடைசி வரிகள்…இல்லை, செய்யுளின் முதல் வரிகள் என்று நான் நினைக்கிறேன், அது இவ்வாறு உள்ளது: “நாம் சமுத்திரத்தை மையினால் நிறைத்து, ஆகாயத்தை தோல் காகிதமாக்கினாலும்:…” அந்த செய்யுள் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? பைத்தியக்கார…ஒரு பைத்தியக்கார சீர்திருத்த நிலையத்தின் சுவற்றில் எழுதப்பட்டிருந்தது. எந்த மனிதனுமே தேவனுடைய அன்பை ஒரு போதும் விளக்கிக் கூற முடியாது. ஓ, அவர் நமக்காக என்ன செய்தார் என்று ஒரு போதும் கூறப்படமுடியாது. என்னே, நீங்கள் எப்படி அங்கே ஒரு தகுதியைப் பொறுத்த முடியும்? அது துவக்கத்திலிருந்து முடிவு வரை அவருடைய கிருபையாயுள்ளது. நான் காணாமற்போனேன், அதமானேன், உதவியற்றவனாய், எந்த நன்மையுமின்றி, அதைக் குறித்து ஒன்றுமில்லாதிருந்தேன், அவர் தம்முடைய கிருபையினால் வந்து என்னை இரட்சித்தார். ஓ, என்னே. அது அவருடைய…அது என்னுடைய கர்த்தர். அது அவருடைய அன்பு, அது அவருடைய நன்மையாயுள்ளது. 433 இப்பொழுது நமக்கு கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் உள்ளன, ஆனால் கிட்டத்தட்ட பதினைந்து கேள்விகள் உள்ளன. 62. சபைக்கு வெளியே ஸ்திரீகள் தனிப்பட்ட முறையில் வேலை செய்வது சரியென்று நீர் நினைக்கிறீரா? 434 ஆம், அது ஒரு கேள்வியாகும், வெறுமென ஒரு…ஒரு வேதப்பிரகாரமான கேள்வியல்ல, ஆனால்…நிச்சயமாகவே நான் சரியென்று கருதுகிறேன். ஆம் ஐயா, நாம் எல்லோருமே ஒருங்கே பணிபுரிகிறவர்களாயிருக்கிறோம். ஸ்திரீகள் அவர்களுடைய ஸ்தானங்களை உடையவர்களாயிருக்கிறார்கள். நிச்சயமாகவே அவர்கள் அதை செய்கிறார்கள். ஆம், ஐயா. உங்களால் செய்ய முடிந்த எல்லா தனிப்பட்ட வேலையையும் அப்படியே செய்யுங்கள், தேவன் அதற்காக உங்களை ஆசீர்வதிப்பார். சரி, இப்பொழுது நாம் பார்ப்போம்: 63. தயவு கூர்ந்து திரித்துவத்தை விளக்கிக் கூறவும். பிதா, குமாரன் இரண்டு நபர்களாயில்லையென்றால், எப்படி குமாரன் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து, பிதாவினிடத்தில்…பரிந்து பேச முடியும்? 435 நல்லது, அன்புக்குரிய நண்பனே, அது ஒரு…அது—அது ஒரு வெளிப்பாடாயுள்ளது. இயேசு, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார், அப்படியானால் எப்படி அவர்கள் இருவராயிருக்க முடியும்? புரிகிறதா? இப்பொழுது, அவர்கள் இருவரல்ல. 436 நான் அதை விளக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு முறை ஒரு ஸ்திரீ என்னிடத்தில், “நீரும் உம்முடைய மனைவியும் இருவராயிருக்கிறீர்கள், அதே சமயத்தில் நீங்கள் ஒன்றாயிருக்கிறீர்கள்” என்று கூறினாள். 437 அப்பொழுது நான், “ஆனால், தேவன் மற்றும் குமாரன் என்பது அதிலிருந்து வித்தியாமாயுள்ளது, பாருங்கள்” என்றேன். மேலும் நான், “சரி” என்று கூறி, “நீங்கள் என்னைக் காண்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “ஆம்” என்றாள். அப்பொழுது நான், “நீங்கள் என்னுடைய மனைவியைக் காண்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “இல்லை” என்றாள். 438 அப்பொழுது நான், “அப்படியானால் பிதாவும் குமாரனும் என்பது இந்தக் கருத்திற்கு வித்தியாசமானது; இயேசு, ‘நீங்கள் என்னைக் காணும்போது, நீங்கள் பிதாவைக் கண்டுவிட்டீர்கள்’ என்றாரே” என்று கூறினேன். புரிகிறதா? 439 பிதா, குமாரன்…பிதா சர்வ வல்லமையுள்ள யோகோவா (தேவன்) அபிஷேகிக்கப்பட்ட தேவ குமாரனாயிருந்த இயேசு கிறிஸ்து என்றழைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். இயேசு ஒரு மனிதனாயிருந்தார், தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார். தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். அவர்…அவர்…அவருடைய தனித்தன்மை, அவருடைய அமைப்பு, அவருடைய தெய்வத்துவம், அவர் என்னவாயிருந்தாலும், அவர் தேவனாயிருந்தாரே! அவர் தேவனேயல்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை. அதே சமயத்தில், அவர் ஒரு மனிதனாயிருந்தார். அவர் ஒரு மனிதனாய், தேவன் உள்ளே வாசம் செய்த ஒரு வீடாயிருந்தார். அது உண்மை, அவர் தேவனுடைய வாசஸ்தலமாயிருந்தார். 440 இப்பொழுது, உங்களுக்கு அதன் பேரிலான சில வேதவாக்கியங்கள் தேவையானால்…சகோதரன் நெவில், நீர் எனக்காக மாற்கு 16:42—ஐ எடுத்தால் நலமாயிருக்கும். சகோதரி உட், நீங்கள் எனக்காக எபேசியர் 1:20-ஐ எடுங்கள். வேறுயாரேனும் ஒரு வேதாகமத்தை வைத்துள்ளீர்களா? நல்லது, உங்களுடைய கர்த்தை உயர்த்துங்கள். சகோதரி ஆர்னால்ட், நீங்கள் அங்கே பின்னால் ஒன்றை வைத்துள்ளீர்களா? சரி, நீங்கள் எனக்கு அப்போஸ்தலர் 7:55ஐ எடுங்கள். சரி. மாற்கு 14:62, சகோதரன் நெவில். சகோதரி உட் அவர்களுடையதோ எபேசியர் 1:20 ஆகும்; அப்போஸ்தலர் 7:55, சகோதரி ஆர்னால்ட். 441 சரி, சகோதரன் நெவில், நீங்கள் அதை எடுத்து வைத்துள்ளீர்களா? சரி, இப்பொழுது வாசியுங்கள்: [சகோதரன் நெவில் வாசிக்கிறார், “அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷ குமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.”—ஆசி.] 442 சரி, இப்பொழுது அங்கே முதல் சொற்றொடரைக் கவனியுங்கள். இயேசு, “நான் அவர் தான்” என்றார். 443 “நான் அவர்தான்,” நான் அவர்தான் என்பது யாராயிருந்து? உலகத்தில் எந்த மனிதனுமே அதை ஒருபோதும் வியாக்கியானிக்க முடியவேயில்லை. கிரேக்க வேதாகம அகராதி போன்றவற்றை வாசிக்கிற நீங்களும்…கூட எந்த ஒரு மனிதனாலும் அதை சேர்த்து உச்சரித்துக் கூற முடியவில்லை…அது J—v—h—u என்று உள்ளது. எபிரேய வேதபண்டிதர்களாலும் அதை ஒருபோதும் உச்சரிக்க முடியவில்லை. அங்கே அந்த எரிகிற முட்செடியில், அந்த நாளில் அவர் மோசேயை சந்தித்தபோது, அது J—v—h—u—என்பதாயிருந்தது. ஆகையால் அவர்கள் அதை “J—o—h, யேகோவா” என்று உச்சரித்தனர், ஆனால் அது “யேகோவா” என்பதாய் இருக்கவில்லை. J—v—h—u, பாருங்கள், எவருமே அறியார். 444 நீங்களோ, “பரவாயில்லை, மோசேயினாலும் அதை உச்சரித்துக் கூற முடியவில்லையா?” என்று கேட்கலாம். 445 மோசே, “என்னை அனுப்பினது யார் என்று நான் கூற முடியும்?” என்று கேட்டான். 446 அதற்கு அவர், “இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று கூறு. இருக்கிறவராக இருக்கிறேன்” என்றார். 447 இப்பொழுது கவனியுங்கள். நான் இருக்கிறேன் என்பது ஒரு நிகழ்காலமாயுள்ளது, “நான் இருந்தேன்” அல்லது “நான் இருப்பேன்” என்பது அல்ல. நான் இருக்கிறேன். இப்பொழுது, அவர், “நான் இருக்கிறேன் என்ற இது எல்லா தலை முறையினூடாகவும் ஒரு ஞாபகச் சின்னமாக இருக்கும்” என்றார். 448 இப்பொழுது இயேசு பண்டிகை நாளிலே அங்கு நின்றதை கவனியுங்கள். அவர்கள், “நீ பைத்தியம் என்பதை இப்பொழுது நாங்கள் அறிவோம்” என்றனர். சரியான வார்த்தைகளில் கூறினால், “நீ பித்து பிடித்தவன்” என்றனர். (பித்து என்றால் “பைத்தியம்” என்பதாகும்). “நீ பைத்தியம் பிடித்தவன் என்பதை நாங்கள் அறிவோம். நீ ஒரு சமாரியன், உனக்கு பிசாசு பிடித்துள்ளது” என்றனர். (பரிசுத்த யோவான் 6-வது அதிகாரம்) அவர்கள், “இப்பொழுது, நீ…ஆபிரகாமைக் கண்டேன் என்று கூறுகிறாயே, உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே?” என்று கேட்டனர். (அவர் தன்னுடைய வயதில் சற்று வயோதிகரைப் போன்று காணப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் முப்பது வயதுடையவராய் மட்டுமே இருந்தார், ஆனால் அவருடைய ஊழியத்தின் நிமித்தம் அவ்வாறு வயோதிகரைப் போன்றிருந்திருக்கலாம்.) அப்பொழுது அவர்கள், “ஐம்பது வயது நிரம்பாத ஒரு மனிதனாயிருக்கிற நீ ‘ஆபிரகாமைக் கண்டதாக கூறுகிறாயே?’ என்று கேட்டனர். மேலும் நீ பைத்தியம் பிடித்தவன் என்பதை இப்பொழுது நாங்கள் அறிவோம்” என்றனர். பார்த்தீர்களா? அதற்கு அவரோ, “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்” என்றார். 449 “நான் இருக்கிறேன்,” அவர் நான் இருக்கிறேன் என்ற மகத்தானவராக இருந்தார். இங்கே அவர் இந்த யூதர்களிடத்தில் மீண்டும், பாருங்கள், “நான் இருக்கிறேன்! என்று கூறிக்கொண்டிருக்கிறார். வலது பாரிசத்தில் வீற்றிருக்கிற நான் வருவதை நீங்கள் காணும்போது…” அது சரிதானே? 450 சகோதரனே அதை மீண்டும் வாசியுங்கள். [சகோதரன் நெவில் வாசிக்கிறார், “மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்.”—ஆசி.] 451 சகோதரி உட், எபேசியர் 1:20 என்ற வசனமா என்று கேட்கிறாள்?—ஆசி.] ஆம், அம்மா. [சகோதரி உட் வாசிக்கிறாள், “தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே…அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,”—ஆசி.] 452 சரி, சகோதரியே உங்களுடையதை வாசியுங்கள். பாருங்கள், அது அதேவிதமாக உள்ளது: [சகோதரி ஆர்னால்ட் வாசிக்கிறார், “அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:”—ஆசி.] 453 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், தேவன் ஒரு பெரிய வலது கரத்தை உடையவராயிருந்திருக்க முடியாது, பாருங்கள், இயேசுவானவர் அவருடைய வலது பாரிசத்தில் நிற்கிறார். வலது பாரிசம் என்பது “அதிகாரத்தை” பொருட்படுத்துகிறது. புரிகிறதா? உதாரணமாக, நான் சபை அதிகாரம் முழுவதையும் உடையவனாயிருந்தாலும் அல்லது நான் ஒரு விதமான ஒரு பேராயராயிருந்தாலும், சகோதரன் நெவில் என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, அவர் என்னுடைய வலக்கையாயிருப்பார். பாருங்கள், அதன் பொருள் அவர்…அவர் என்னுடைய வலக்கரமாய் இருப்பார் என்பதேயாகும். 454 இப்பொழுது, இயேசு வலது பாரிச வல்லமையில் இருக்கிறார். இப்பொழுது, அவர் அவ்வண்ணமாய்க் கூறுகிறார், இங்கே எபேசியரில், அவர் அதை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தபோது, அவர் வலது பாரிசத்தின் வல்லமையில் இருக்கிறார். “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” (அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் கூறினார்) “எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் உடையவனாயிருக்கிறேன். ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்.” 455 “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்.” அது எங்கே…அவரைத் தவிர மற்றொரு தேவன் அங்கேயிருந்தால், அவர் வல்லமையற்றவராயிருப்பாரே. பாருங்கள், அங்கே மற்றொரு தேவனே இருக்க முடியாது. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” அவருடைய கரத்தில் இருக்கிறது. ஆகையால், நீங்கள் பாருங்கள், “அவர் வலதுபாரிசத்தில் நின்று கொண்டிருக்கிறார்,” (அந்த நபர் கேள்வி கேட்டுள்ளது போல), அதனை அது பொருட்படுத்துகிறதில்லை… 456 இப்பொழுது பாருங்கள்! சரீரம்…தேவன் ஆவியாயிருக்கிறார். ஆம், எத்தனைபேர் அதை புரிந்து கொள்கிறீர்கள்? அப்படியானால், “ஆமென்” என்று கூறுங்கள். தேவன் ஆவியாயிருக்கிறார், இயேசு மனிதனாயிருக்கிறார், இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். இயேசு…நாம் ஒரு போதும் தேவனைப் பார்க்க முடியாது, பாருங்கள், அவர் ஆவியாயிருக்கிறார். உங்களால் ஆவியைப் பார்க்க முடியாது. “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.” எந்த மனிதனாலும் தேவனைக் காண முடியாது. 457 நான் இதைக் கூறுவேனாக, அதாவது, “நீங்கள் என்னை ஒருபோதும் கண்டதில்லை.” நீங்கள் உங்கள் ஜீவியம் முழுவதிலுமே என்னை ஒருபோதும் கண்டிருக்கவில்லை. நீங்கள் என்னை ஒருபோதும் காணவேமாட்டீர்கள். அது உண்மை. இந்த நபரை அறிவிக்கிற இந்த சரீரத்தையே நீங்கள் காண்கிறீர்கள், அது இங்கே உள்ளே இருக்கிறது. இப்பொழுது, இந்த சரீரம் நித்திய ஜீவனை உடையதாயிருக்கவில்லை, ஆனால் ஆவி நித்திய ஜீவனை உடையதாயிருக்கிறது. இந்த சரீரம் திரும்பிப் போய்விடும், ஆனால் அது இதில் உள்ளதைப் போன்ற ஒத்த தன்மையாய் மீண்டும் வரும், அதாவது ஒரு கோதுமை மணியானது நிலத்திற்குள் செல்வது போன்றேயாகும். கிறிஸ்தவ மார்க்கம் உயிர்த்தெழுதலின் பேரில் சார்ந்தாயுள்ளதேயன்றி அதற்குப் பதிலாக வேறொன்றை மாற்றுவது அல்ல. உயிர்த்தெழுதல்; இயேசு மரித்து கீழே சென்ற விதமாகவே, அதேவிதமாகவே இயேசு திரும்பி வந்தார். நீங்கள் சிகப்பு தலையினையுடையவராய் மரித்து கீழே சென்றால், நீங்கள் திரும்பவும் சிகப்பு தலையினையுடையவராகவே வருவீர்கள்; நீங்கள் கறுப்புத்தலையினையுடையவராய் மரித்து கீழே சென்றால், நீங்கள் கறுப்புத் தலையோடு திரும்ப எழுப்பி வருவீர்கள். பாருங்கள், அது ஒரு உயிர்த்தெழுதலாய் உள்ளது. 458 நீங்கள் புசிக்கும்போது…நான் அதைக் குறித்து மருத்துவரிடத்தில் கேட்டேன், அண்மையில் நான், “ஏன்…நான் பதினாறு வயதாயிருந்தபோது…ஒவ்வொரு முறையும் நான் புசிக்கும்போது, நான் என்னுடைய ஜீவனை புதுப்பித்துக் கொள்கிறேனா?” என்று கேட்டேன். 459 அதற்கு அவர், “அது உண்மையே” என்றார். 460 நீங்கள் ஒவ்வொரு முறையும் புசிக்கும்போது, புதிய—புதிய உயிரணுக்களை உள்ளே எடுத்துக் கொள்கிறீர்கள்…மாம்சம் அதை உண்டு பண்ணுகிறது…இல்லை ஆகாரம் இரத்த அணுக்களை உண்டுபண்ணுகிறது, அந்த இரத்த அணுக்கள் உங்களை பலமுள்ளவர்களாக்குகிறது. அந்த விதமாகத்தான் நீங்கள் ஜீவிக்கிறீர்கள். அதன்பின்னர், நீங்கள் உயிர் வாழ்வதற்காக ஏதோ ஒன்று ஒவ்வொரு முறையும் மரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று மரிக்கிறது: நீங்கள் இறைச்சியை புசிக்கும்போது பசு மாடு மரித்துவிடுகிறது; அல்லது நீங்கள் எதைப் புசித்தாலும்; மீன் மரிக்கிறது; அல்லது ரொட்டியை உண்டுபண்ண உருளைக்கிழங்கு மரித்துவிடுகிறது;…ஜீவனின் ஒவ்வொரு ரூபமும்; நீங்கள் மரித்த பொருளினூடாக மாத்திரமே உயிர் வாழ முடியும். 461 ஏதோ ஒன்று மரித்த காரணத்தினால் மாத்திரமே உங்களால் நித்தியமாக வாழ முடியும், அது இயேசுவாகும். நீங்கள் சபையை சேர்ந்து கொண்ட காரணத்தினால் அல்ல, நீங்கள் ஞானஸ்நானம்பண்ணப்பட்ட காரணத்தினால் அல்ல, நீங்கள் கிறிஸ்தவமார்க்கத்தை ஒப்புக் கொண்ட காரணத்தினால் அல்ல; உங்களுக்காக சிந்தப்பட்ட இரத்தமான…இயேசு கிறிஸ்துவின் ஜீவனை நீங்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயாம், நீங்கள் அவரை உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டீர்கள். 462 இப்பொழுது, கவனியுங்கள், நான் இதைக் கேட்கிறேன். நான் இதை உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன். இதை நோக்கிப் பாருங்கள், இது அழகாயுள்ளது. ஒரு கால் நான் அதன்பேரில் இங்கே இதற்கு முன் பிரசங்கித்திருக்கலாம் (எனக்குத் தெரியவில்லை); எங்கும் பிரசங்கிக்கும்போது, நீங்கள் ஒரு…குறிப்பிட்ட இடங்களில் என்ன கூறினீர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடுவீர்கள். ஆனால் அது ஏனென்றால், அப்பொழுது… 463 இப்பொழுது, நான் நினைக்கிறேன், சகோதரி ஸ்மித்…எனக்குத் தெரிந்த சகோதரன் பிளீமேன் அங்கு பின்னால் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. திரிபேனாள், அவள் ஒரு சிறு பெண்ணாய் இருந்தபோது, அவளை எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் என்னை நினைவிருக்கும், நான் முன்பெல்லாம்…சற்று குட்டையாக, பருமனாக, கறுமையான வளை—வளைவான முடியினையுடையவனாயிருந்தேன். நான் முன்பு குத்துச் சண்டையிடுவது வழக்கம். ஓ, அப்பொழுது உலகத்திலேயே நான் ஒரு பகட்டான ஆடம்பரமான மனிதன் என்றே என்னைக் குறித்து எண்ணிக்கொண்டேன். “ஓ”, நான், “யாருமே என்னை அடித்துவிட முடியாது. இல்லை, ஐயா” என்று எண்ணியிருந்தேன். ஆனால் நான்—நான் அதன் பேரில் ஏமாற்றம் கொண்டேன். நீங்கள் பாருங்கள். ஆனால் நான்…இப்பொழுது, நான் அப்படியே, “ஓ, என்னே” என்று எண்ணிப்பார்த்தேன். மேலும் நான், “நீங்கள் இந்தப் பொருளை என்னுடைய முதுகின்மேல் வைத்தால், நான் அதனோடு வீதியில் நடந்து சென்றுவிடுவேன்” என்று எண்ணியிருந்தேன். நிச்சயமாகவே, எந்தக் காரியமும் என்னைத் தொல்லைபடுத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நான் சாப்பிடும்போது, நான் எல்லா நேரத்திலுமே பெரியவனாகவும், பலமுள்ளவனாகவும் ஆனேன். ஒவ்வொரு முறையும் நான் உள்ளே…புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வேன். நான் இன்றைக்கு செய்வதுபோன்றே நான் முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, அவரை, இறைச்சி முதலியனவற்றைச் சாப்பிட்டேன். நான் எல்லா நேரத்திலும் பலமுள்ளவனாகவும், பெரியவனாகவும் ஆனேன். நான் ஏறக்குறைய இருபத்தைந்து வயதுடையவனாய் இருந்த போது… 464 நான் அப்பொழுது புசித்ததைவிட இப்பொழுது நன்றாக புசிக்கிறேன், உங்கள் எல்லாருக்கும் என்னைத் தெரியும், அவ்வாறு புசிப்பதும் தெரியும், என்னால் இப்பொழுது நன்கு புசிக்க முடிகிறது, நாம் எல்லோருமே நன்றாக புசிக்கிறோம். ஆனால் சகோதரன் ஈகன் இது ஏன் இவ்வாறு உள்ளது? ஆகையால் நான் இன்னமும் நல்ல உணவினை அப்பொழுது புசித்ததைவிட, மேலான ஊட்டச்சத்துக்களையும் மற்றுமுள்ள ஒவ்வொன்றையும் புசித்துக்கொண்டிருக்கிறேன்…நான் அதிகமாக புசித்தாலும், நான் படிப்படியாக தளர்வுற்றுப்போகிறேனே. இப்பொழுது நான் குனிந்த—தோள்பட்டைகளை உடைய வயோதிகனாய், வழுக்கைத் தலையனாய், நரைமுடியாக மாறி, கைகள் சுருக்கங்கொள்ள, முகத்தில் குழிவிழுந்து, தோள்பட்டைகள் தொங்கிக் கொண்டிருக்க, ஒவ்வொரு நாள் காலையும் எழுந்திருக்க கடினமானவனாகவும் ஆகிக்கொண்டு வருகிறேன்,…ஓ, என்னே. அது ஏன் இப்படியாகிறது? நான் ஒவ்வொரு முறை புசிக்கும்போதும் நான் என்னுடைய ஜீவனை புதுப்பித்தாலும், ஏன் இப்படியாகிறது? 465 நான் ஒரு கூஜாவிலிருந்து ஒரு கண்ணாடி குடுவைக்குள்ளாக தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தால், அப்பொழுது அதே தண்ணீர் பாதியளவு தான் நிரம்புகிறது, அப்பொழுது தண்ணீரின் அளவு உயருவதற்கு பதிலாக அதேத் தண்ணீர் மாறிமாறி ஊற்றும்போது எல்லா நேரத்திலுமே குறையத் துவங்குகிறது; நான் உள்ளே அதிகமாக ஊற்றினால், அது வேகமாகக் குறையத் துவங்குகிறது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. உங்களால் அதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாது, இந்த புத்தகம் மாத்திரமே தேவன் அதை நியமித்திருக்கிறார் என்று நிரூபிக்கும்படியானதாயுள்ளது; அது ஒரு நியமனமாய் உள்ளது, தேவன் நம்முடைய வளர்ச்சியைக் கண்டார். 466 வயோதிக மனிதராகிய உங்களைத்தான், வயோதிக ஸ்திரீகளாக உங்களைத்தான், உங்களில் சிலருடைய—உங்களுடைய கணவன்மார்கள், உங்களுடைய மனைவிகள் மரித்துப் போயிருக்கலாம். அது—அது எந்தக் காரியத்தையும் தொல்லைப்படுத்துகிறதில்லை. அல்லேலூயா. அவர்கள் முற்றிலுமாக காலத்தின் திரைக்கு அப்பால் கடந்துபோய் காத்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் உங்களோடிருக்க வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை, நிச்சயமாகவே அவர்கள் அவ்வாறிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்று வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களோ, “ஆண்டவரே, எது வரைக்கும்?” என்று சத்தமிட்டு கூப்பிட்டார்கள் என்று வேதம் உரைத்துள்ளது. புரிகிறதா? அவர்கள் தங்களாகவே அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை. 467 தேவன் நம்மை ஒருபோதும் தூதர்களாக உண்டாக்கவில்லை, அவன் நம்மை மனிதனாகவும் மனுஷியாகவுமே உண்டாக்கினார். நாம் எப்பொழுதுமே புருஷராகும், ஸ்திரீயாகவுமேயிருப்போம், ஏனென்றால் நாம் தேவனுடைய சொந்த ஞானத்தின் ஒரு—ஒரு உற்பத்தியாயிருக்கிறோம். நாம் எப்பொழுதுமே புருஷரும், ஸ்திரீகளுமாகவே இருக்க முடியும். 468 ஆனால் இது என்ன செய்கிறது? பாருங்கள், நீங்கள் கணவனோடு பீடத்தண்டை நடந்து சென்று, நாம் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு, சட்டப்படியான மணம்புரிந்த மனைவியாயிருக்கும்படி தேவனுடைய கிருபையினால் இந்த பரிசுத்த விவாகத்தில் ஒன்று சேர்ந்து வாழ நீங்கள் அளித்த உங்களுடைய சாட்சியையும் நீங்கள் கூறின உங்களுடைய வாக்குறுதியையும் ஒருகால் நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். நீங்கள் அறிந்துள்ள, நீங்கள் இருவருமே கவனிக்கத் துவங்கின முதல் காரியம். அவர் நேராக, பளபளப்பான தலை முடியோடு இருந்ததும், அம்மா, அவள் அழகாகவும், சிறு பழுப்பு நிறக் கண்களோடு அல்லது நீல நிறக் கண்களோடு அல்லது அது என்னவாயிருந்ததோ அதைப் பார்க்கிறீர்கள். ஓ, நீங்கள் எப்படியாய் அவளை நோக்கிப் பார்த்தீர்கள். நீங்கள் வெளியே நடந்து போய், நீங்கள் தந்தையை பார்த்து, “இப்பொழுது அவர்களுடைய தோள்பட்டைகள் நேராக இருப்பதைப் பார்த்தீர்கள்.” கொஞ்சங்கழித்து அவைகள் தொங்கத் துவங்குகின்றன. அம்மாவோ நரைத்த தலையையுடையவளாகி, முடக்குவாதம் போன்றவை உண்டாக, கொஞ்சங்கழித்து அவள் மரித்துப் போனாள், அல்லது அவர் மரித்துப் போனார். 469 அது என்னவாயிருந்தது? நீங்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை தேவன் கண்டு, அவர், “அதுதான் இது, அந்தவிதமாகத்தான் நீ எனக்கு வேண்டும்” என்றார். சரி, மரணமே, நீ வா, ஆனால் நான் உன்னை அனுமதிக்கும் வரை உன்னால் அவர்களை எடுத்துக்கொள்ள முடியாது. 470 ஓ, ஓ நான் யோபுவைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன். ஆம், தேவன் கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார், தேவன் யோபுவை நேசித்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். (சாத்தானால் உன்னை எடுத்துக் கொள்ள முடியாது என்பதை கவனி.) அவர், “நீ அவனை உன்னுடைய கரங்களில் எடுத்துக் கொள், ஆனால் நீ அவனுடைய ஜீவனை மாத்திரம் எடுத்துக் கொள்ளாதே” என்றார். 471 அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம் என்னவென்றால் தோள்பட்டைகள் குனியத் துவங்கி, கொஞ்சங்கழித்து நீங்கள் மரித்துப் போய்விடுவீர்கள். என்ன சம்பவித்ததாயிருந்தது? 472 இப்பொழுது உயிர்த்தெழுதலில் அங்கே மரணத்தின் அறிகுறிகள் என்ற ஒரு காரியமும் இருக்காது. அங்கே இந்த பூமிக்குரிய அறிகுறிகளின் ஒரு காரியமும் இருக்க முடியாது, அதைக்குறித்து என்னவென்றால்…பாருங்கள், நீங்கள் தேவனுடைய சித்தத்தினால் வளர்ந்து கொண்டிருந்தீர்கள், நீங்கள் ஜீவனை உடையவராயிருந்தீர்கள். அப்பொழுது மரணம் உள்ளே வந்து உங்களை கீழே கொண்டு செல்கிறது. அதே ஆகாரத்தையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் புசித்து, அதே விதமான தண்ணீரையே பருகி, ஒவ்வொன்றையும் செய்கிறீர்கள், ஆனாலும் மரணம் உள்ளே வருகிறது. ஆனால் காட்சியோ ஏற்கெனவே அமைக்கப்பட்டாயிற்று. அல்லேலுயா. உயிர்த்தெழுதலில் நீங்கள் மீண்டும் ஜீவனோடிருப்பீர்கள். அங்கே மரணமே இருக்காது, அல்லது மரணத்திற்கொத்த தன்மையே இருக்காது அல்லது வயோதிகமோ அல்லது முடமோ அல்லது வேறெந்தக்காரியமோ இருக்காது. நாம் அவருடைய சாயலில் அழிவில்லாமல், என்றென்றுமாய் பரிபூரணப்பட்டவர்களாய் நிற்போம். அல்லேலூயா. ஓ, நான்…அது எந்த நபரையும் சத்தமிடச் செய்யும், விசேஷமாக நீங்கள் என்னுடைய வயதை அடையும் போது சத்தமிடச் செய்யும். 473 என்னுடைய வயதில் நீங்கள் அதைக் குறித்து எப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக சிந்திப்பீர்கள் என்றே நான் யூகிக்கிறேன். நீங்கள் அந்த மாதிரியான மாறும் நிலையில் இருக்கிறீர்கள், நீங்கள் பாருங்கள்…நீங்கள், “இதைக் குறித்தெல்லாம் என்ன? நான் என்ன செய்திருக்கிறேன்?” என்று வியப்புறத்துவங்குகிறீர்கள். நான் இங்கே திரும்பி கீழ் நோக்கிப் பார்த்து, “என்னே நன்மை: கர்த்தாவே, அவர் எங்கே போயிருக்கிறார்? இதோ நான் நாற்பத்தியெட்டு வயதுடையவனாய் இருக்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் நான் அரை நூறு வயதினை அடைவேன், வ்வூயு, நான் மாத்திரம்…” என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். 474 நான் ஆதாயம் செய்துள்ள ஒரு சில ஆத்துமாக்களை அப்படியே நோக்கிப் பார்க்கிறேன். நான் இன்னும் கோடா கோடி ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும். தேவனே எனக்கு உதவி செய்யும். நான் ஒரு விடுமுறைக் காலத்தில் கூட வீட்டிற்கு வருவதன் பேரில் நானே என்னைக் குறித்து வெட்கமடைகிறேன். அதாவது, “ஓ, அறுப்புக்கு வயல்நிலங்கள் விளைந்திருக்கின்றன, வேளையாட்களோ கொஞ்சம். கோடிக்கணக்கானோர் பாவத்திலும் அவமானத்திலும் ஒவ்வொரு நாளும் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய கூக்குரலுக்கு செவிக்கொடுக்கவேண்டும்” என்பதை சிந்தித்துப் பாருங்கள். நான் அங்கே இரவிலே படுக்கைக்குச் செல்லும்போது, அப்பால் உள்ள தேசத்தில் உள்ள அந்த ஏழ்மையான அஞ்ஞானிகளின் கூக்குரலைக் கேட்டேன். நான் ஆகாய விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது எப்படியாய் ஆயிரக்கணக்கில் அவர்கள் வந்து, இயேசு கிறிஸ்துவின் கதையைக் கேட்பதற்கு என்னை பின் தொடர்ந்து வந்து இழுத்தபோது, அங்கே அவர்களை பின்னால் தடுத்த நிறுத்த அவர்கள் இராணுவத்தை வைக்க வேண்டியதாயிருந்தது. 475 நாமோ இங்கே கெஞ்சி, செய்தித்தாளில் விளம்பரம் செய்து, மற்றுமுள்ள ஒவ்வொன்றையும் செய்து, அவர்கள் அமருவதற்கு மிக அருமையான இடங்களை ஏற்பாடு செய்து, மிகச் சிறந்த பொழுதுபோக்கிற்காக அருமையான பாடலை பாடச் செய்தாலும், அவர்கள் வந்து, “ஓஓஓஓ, பரவாயில்லை, அது என்னுடைய விசுவாசத்தை சேர்ந்திராவிடினும், அது சரியாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன்” என்பார்கள். 476 ஓ, என்னே, அது எவ்வளவு—எவ்வளவு—எவ்வளவு காலம் நீடித்திருக்க முடியும்? அதுவல்ல…இது சரியல்ல. நாமோ இங்கே கோடான கோடி டன் எடையுள்ள ஆகாரத்தை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறோம், அந்த ஜனங்களோ அதை ஏற்றுக் கொள்ள மகிழ்ச்சியடைவர்கள். நம்மைப் போன்றே அவர்களும் இப்புவியின் சிருஷ்டிகளாயிருக்கிறார்கள். என்னே, நாம்…நல்லது, அது நீண்ட காலத்திற்கு அந்தவிதமாக செயல்பட முடியாது. 477 சரி, இப்பொழுது, பிதா யாராயிருக்கிறார்? பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறார்கள். 1 யோவான் 5:7- ல் கவனியுங்கள், அது, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, (அது குமாரனாயுள்ளது)…பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று உரைத்துள்ளது. 478 “பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம்” அந்த மூன்று மூலக்கூறுகளும் கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து வந்தன. அவர்கள் அவருடைய விலாவில் உருவக் குத்தினபோது: தண்ணீர் வெளியே வந்தது, இரத்தம் வெளியே வந்தது, “உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கிறேன்” என்றார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, அதுவே அந்த மூன்று மூலக்கூறுகள். இந்த மூன்றும் ஒன்றாயிருக்கவில்லை, ஆனால் அவைகள் ஒருமைபட்டிருக்கின்றன. 479 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி; 1 யோவான் 5:7, “இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று கூறுகிறது. 480 “ஜலம், இரத்தம், ஆவி ஒருமைபட்டிருக்கின்றன.” ஒன்றாயல்ல, ஆனால் ஒருமைபட்டிருக்கின்றன. ஆகையால் பிதா…சரீரமானது செய்ய முடிந்த ஒரேக் காரியம், தேவன் தம்மையே காண முடிந்தபோது, அதாவது இந்த சரீரம் கடந்து சென்ற தண்டனையினூடாக பார்க்கும் போது, அங்கே இடைவெளி இருந்தது…அங்கே இடைவேளை இருக்கிறது, நீங்கள் பாருங்கள். அப்பொழுது அங்கே அந்த இரத்தமானது அவருக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே நிற்கிறதை அவர் காண்கிறார். இதோ அவருடைய வார்த்தை, “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று உரைத்தது. இங்கே இயேசு, “நான்…ஆனால் நான் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன். பாருங்கள், நான் அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன்” என்றார். 481 அன்றொரு இரவு அங்கே அந்த அறையில் உண்மையாக மோசமாக இருந்த அந்த ஸ்திரீயைக் குறித்த தரிசனத்தை நான் கண்டபோது கூறின என்னுடைய கதை நினைவிருக்கிறதா? நான் அவளை கடிந்து கொண்டிருந்தேன், “தேவனே, நீர் ஏன் அந்த இடத்தையே அழித்துப் போடக்கூடாது?” என்றேன். பாருங்கள், அப்பொழுது அவர் எனக்குக் காண்பித்தார். அப்பொழுது நான் அவளிடம் நடந்து சென்று, என்ன சம்பவித்திருந்தது என்று அவளிடம் கூறினேன். இப்பொழுது, இது என்னுடைய கடைசி கேள்வியாயுள்ளது. 64. வேதவாக்கியங்களின்படி சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்னர் அந்த யூதர்கள்…கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள் என்று நீர் நினைக்கிறீரா? 482 நான்—நான்—நான் உண்மையாகவே சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலை…விசுவாசிக்கிறேன். இது என்னுடைய சொந்த கருத்தாயுள்ளது, பாருங்கள். நமக்கு நேரமிருந்தால், நாம் அதனூடாக செல்லலாம், ஆனால் இப்பொழுது ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. பாருங்கள், யூதர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது நினைவிருக்கட்டும், எனவே அந்த நபர் இதை அறிந்து கொள்வார், நம்முடைய கண்கள் குருடாக்கப்பட்டன…இல்லை நாம் நம்முடைய பார்வையைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டன. வேதவாக்கியங்கள் அதைக் குறித்து உரைக்கின்றன என்பதை எவரும் அறிவர். அது சரியா? அதாவது நம்முடைய…நாம் குருடாக்கப்பட்டோம்…நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி யூதர்கள் குருடாக்கப்பட்டனர் என்று பவுல் நமக்குச் சொல்லுகிறான். புரிகிறதா? நாம் புத்திர சுவிகாரத்தினாலே அந்த மரத்திற்குள்ளாக ஒட்டவைக்கப்படிருக்கிற காட்டொலிவ மரமாயிருக்கிறோம். 483 இப்பொழுது இதோ என்னுடைய கருத்து, நான் அதை அப்படியே உங்களுக்குக் கூற போகிறேன்…அவர்கள், “நீர்…அவ்வாறு நினைக்கிறீரா?” என்று என்னைக் கேட்கிறார்கள். இப்பொழுது இந்தவிதமாகவே இது சம்பவிக்கும் என்று நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. அது எப்போது என்னவாயிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலும், அவருடைய இரக்கத்தினாலும் நாம் அங்கே இருப்போம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்: பாருங்கள், அவருடைய கிருபையின் மூலமேயாகும், அது என்னவாயிருந்தாலும் சரி. என்னால் அதைக் கணித்துக் கூற முடியாமலிருக்கலாம், ஆனால் இந்த விதமாகத்தான் என்று நான் நினைக்கிறேன். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். புறஜாதியாருடைய காலம் இப்பொழுது முடிவுற்றுக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நாம் முடிவில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். 484 இப்பொழுது யூதர்கள்: இங்கே யூதர்களுக்கு இரண்டு காரியங்கள் எப்பொழுதுமே அநியாயமாக்கப்பட்டு வந்துள்ளன; அவர்கள் குருடாய் இருந்து வருகின்றனர். அவர்களால் அதைப் பார்க்க முடியவில்லை; ஏனென்றால் புறஜாதியார், ஏனென்றால் ஒரு காரியம், அநேக முறை… 485 சகோதரி ஸ்மித் அவர்களே, நான் பென்டன் துறை முகத்தில் ஒரு யூதனிடத்தில் பேசினபோது, அவன் என்னிடத்தில் என்னக் கூறினான் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? (அங்கே இருந்த அந்த இஸ்ரவேலரின் இடங்களில்…அங்கே அந்த இஸ்ரவேலரின் இடங்களில் ஒன்று) அந்த கேள்வி ஒரு குருட்டு மனிதனின் சுகமளித்தலைப் பற்றியதாயிருந்தது. அப்பொழுது அவர், “நீர்…யூதனுக்கு துண்டித்து…நீர் தேவனை மூன்று துண்டிகளாக துண்டித்து ஒரு யூதனுக்கு அளிக்க முடியாது; அவனிடத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக அளிக்க முடியாது” என்றார். மேலும், “நீர் அதை ஒரு யூதனிடத்தில் அளிக்க முடியாது, நாங்கள் விக்கிரகாராதனைக்காரர்கள் அல்ல” என்றார். அதனைத் தொடர்ந்து, “நாங்கள் ஒரே தேவனில் விசுவாசங் கொண்டிருக்கிறோம்” என்றார். புரிகிறதா? 486 நீங்கள் பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று தேவனை மூன்றாக்குகிறீர்கள்; நீங்கள் நிச்சயமாகவே அங்கே ஒரு யூதனை குருடாக்குகிறீர்கள், ஏனென்றால் அவன் அதை நன்கு அறிந்துள்ளான். அவன் அதைவிட நன்கு அறிந்துள்ளான். விக்கிரகாராதனை உள்ளது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது உங்களை ஒரு விக்கிரகாரதைக்காரனாக்கிவிடும், நீங்கள் மூன்று தேவர்களை உடையவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அவைகளை ஒரே தேவனாக்க வேண்டும், அது மூன்று தேவர்கள் அல்ல, அது அதே தேவனின் மூன்று உத்தியோகங்களாகும். பாருங்கள், தேவன் பிதாத்துவத்தில் ஊழியம் செய்தார். அவர் குமாரத்துவத்தில் ஊழியம் செய்தார், அவர் இப்பொழுது பரிசுத்த ஆவியின் யுகத்தில் ஊழியம் செய்கிறார். அது அதே மாறாத தேவனாகும். 487 அந்தக் காரணத்தினால்தான் நாம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட கட்டளையிடப்பட்டோம்; ஏனென்றால் ஒரு நாமத்தில் அல்ல…நாமத்தில், நாமங்களில் அல்ல; நாமங்களில் அல்ல, அல்லது பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்ல; ஆனால், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அல்ல.” பாருங்கள், அதே தேவன் கிறிஸ்துவாயிருப்பதை அடையாளங்கண்டு கொள்ளுதல், பாருங்கள், அது யாராயிருக்கிறது, அது வேறெந்தவிதமாயுமிருக்க முடியாது. புரிகிறதா? வேதம்… 488 அப்படியானால் நம்முடைய வெளிப்பாடானது தவறாயிருந்தால், அப்பொழுது பேதுருவும், மற்ற அப்போஸ்தலர்களும் தவறான காரியத்தையே கற்பித்தனர் என்பதாகும், ஏனென்றால் வேதத்தில் ஒவ்வொரு நபரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். எந்த ஒரு நபரும் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” எப்போதுமே ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை, அது ஒரு கத்தோலிக்க உபதேசம். என்னால் அதை உங்களுக்கு அவர்களுடைய சொந்த வார்த்தைகளைக் கொண்டு, அவர்களுடைய சொந்த கிரேக வேதாகம அதிகாராதியையும், மற்ற ஒவ்வொரு காரியத்தைக் கொண்டும் நிரூபிக்க முடியும். அது ஒரு கத்தோலிக்கக் கோட்பாடு, ஒரு வேதாகம உபதேசமல்ல, அல்ல. எந்த மனிதனுமே… 489 இங்கிலாந்து அரசனும் கூட இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். ஏறக்குறைய கடைசி அப்போஸ்தலன் மரித்த ஆறுநூறு ஆண்டுகள் கழித்தே இந்த ஞானஸ்நானம் மாற்றப்பட்டது. இங்கிலாந்து அரசன் ஞானஸ்நானம் பெற்ற அந்த சமயத்தில் அது இங்கிலாந்து என்று கூட அழைக்கப்படாமல், அது “தூதர் நிலம்” என்றே அழைக்கப்பட்டது. அதிலிருந்துதான் இங்கிலாந்து என்ற பெயர் உண்டானது. அந்த அரசன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். 490 அவனை மனமாற்றமடையச் செய்தது எதுவென்றால், ஒரு சிறு அடைக்கலான் குருவியாகும். எப்பொழுது…என்னால் எண்ணிப் பார்க்க முடிந்தால்…பரிசுத்த ஏஞ்சலோ அல்ல. இப்பொழுது, அவனுடைய பெயர் என்னவாயிருந்தது? அகடாபஸ் [விளங்காத எழுத்துகள்—ஆசி.], பரிசுத்த அகடாபஸ் என்றே நான் நினைக்கிறேன். இப்பொழுது, எனக்கு அந்தப் பெயர்தானா என்று நிச்சயம் தெரியாது. ஆனால், எப்படியோ, அவன் அங்கு சென்றான், அவர்கள் இவர்களில் சிலரைப் பிடித்துக் கொண்டனர்… 491 அவர்கள் இவர்களை தூதர்கள் என்று அழைத்தனர், ஏனென்றால் அந்த ஜனங்கள் அசீரியர்கள் போன்றவர்கள், கருமை நிறமுடையவர்களாயிருந்தனர், இந்த ஆங்கிலேயரோ நீண்ட, வெண்மையான, சுருளான தலைமுடியையுடைய இளம் பொன் நிறமான தலையை உடையவர்களாயிருந்தனர், ஆங்கிலேயர்—சாக்சன் என்பவர்கள் நீலநிற கண்களை உடையவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவர்கள், “இவர்கள் தூதர்களைப் போன்று காணப்பட்டனர்” என்று கூறினர். ஆகவே அவர்கள் அந்த தேசத்தையும், “தூதர் நிலம்” என்றே அழைத்தனர். 492 அப்பொழுது அங்கு கர்த்தருடைய ஊழியக்காரன் ஒருவன் சென்று அவர்களுடைய ராஜாவுக்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு பெரிய, திறந்த கணப்படுப்பினை அமைத்திருந்தனர். நான் அண்மையில் அதைக் குறித்த சரித்திரத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய பறவை அந்த வெளிச்சத்தண்டைப் பறந்து வந்து, பின்னர் திரும்பிப் போய்விட்டது, அப்பொழுது ராஜா, “அது எங்கிருந்து வந்தது? பின்னர் அது எங்கே சென்றது?” என்ற கேள்வியைக் கேட்டான். புரிகிறதா? அப்பொழுது அவன், “அந்தப் பறவை வெளிச்சத்திற்குள் வந்தது, நாம் அதைப் பார்த்தோம், பின்னர் அது மீண்டும் இருளுக்காக பறந்து சென்று விட்டது. அந்தவிதமாகவே ஒரு மனிதன் போகிறான் அல்லவா?” என்றான். 493 அப்பொழுது பிரசங்கியார், “ஆனால் அவன் இங்கு வருவதற்கு முன்பு அவன் என்னவாயிருந்தான்?” என்று கேட்டார், பாருங்கள். அது அந்த ராஜாவைப் பற்றிக் கொண்டது; அடுத்த நாள் காலையில் அவனும், அவனுடைய வீட்டாரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அது உண்மை. 494 அதன் பின்னர் என்ன? தெளிப்பு ஞானஸ்நானம் முதலில் ஒரு மனிதனுக்கு அல்லது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தது கத்தோலிக்க சபையாயிருந்தது. கத்தோலிக்க சபையே முதலில் தெளிப்பு ஞானஸ்நானத்தைக் கொடுத்தது. முதலில் தண்ணீரை ஊற்றி ஞானஸ்நானம் கொடுத்தது கத்தோலிக்க சபையாகும். பிராட்டஸ்டென் சபை எப்பொழுதுமே ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது…வேதத்தில் அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் மூழ்க்கு ஞானஸ்நானங் கொடுத்தனர். எல்லா இடத்திலுமே. அவர்கள் வேறு ஏதாவது வித்தியாசமாக எங்காவது செய்தார்களாக என்பதை ஒரு இடத்தில் கண்டறியுங்கள் பார்க்கலாம். 495 இப்பொழுது, இதில், இந்த மகத்தான நேரத்தில், யூதர்கள்…விசுவாசிக்க முடியவில்லை, நான் அந்த ரபீயினிடத்தில் கேட்டேன், நான், “ரபீ, தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பது உமக்கு கடினமானதாக இருக்குமா?” என்று கேட்டேன். 496 அவர், “நான் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறேன்” என்றார். 497 அப்பொழுது நான், “ஏசாயா 9:6—ல், ‘நமக்கு ஒரு குமாரன் பிறப்பார்?’ என்று அவர் எதைப் பொருட்படுத்திக் கூறினார்? அவர் யாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்?” என்று கேட்டேன். 498 அதற்கு அவர், “அவர் மேசியாவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்றார். 499 அப்பொழுது நான், “அப்படியானால் மேசியா பிறப்பாரா?” என்று கேட்டேன். 500 அதற்கு, “ஆம், அவர் பிறப்பார்” என்றார். 501 அப்பொழுது நான், “அப்படி அவர் பிறக்க வேண்டுமானால், அவருக்கு ஒரு…அவர் ஒரு தாயை உடையவராயிருப்பாரே” என்றேன். 502 அதற்கு அவர், “ஆம், அவர் ஒரு தாயை உடையவராயிருக்க வேண்டும். அவர் ஒரு தந்தையையும் கூட உடையவராயிருக்க வேண்டும்” என்றார். 503 அப்பொழுது நான், “முற்றிலுமாக. சிவந்த சமுத்திரத்தை பிரிந்த மகத்தான யோகோவா தேவனால் மாசற்ற பிறப்பினால் இந்த குழந்தைக்கு ஒரு பிறப்பை அளிக்க முடியும் என்று விசுவாசிப்பது உமக்கு கடினமாயிருக்குமா?” என்று கேட்டேன். புரிகிறதா? அங்குதான் அவர் மாட்டிக் கொண்டார். 504 அவர், “ஆனால் நீங்கள் அவரை மூன்று தேவர்களாக்க முடியாது” என்றார். 505 நான், “அவர் மூன்று தேவர்களாயிருக்கவில்லை” என்றேன். மேலும் நான், “மேசியா தேவனுக்கு என்ன உறவு முறையாய் இருப்பார்?” என்று கேட்டேன். 506 அவர், “அவர் தேவனாயிருப்பார்” என்றார். 507 அப்பொழுது நான், “இப்பொழுது நீர் அதைப் புரிந்து கொண்டீர். இப்பொழுது நீர் அதைப் புரிந்து கொண்டீர், அவர் தேவனாயிருக்கிறார்” என்றேன். அது சரியாயுள்ளது. 508 அதன்பின்னர் அவர் என்னிடத்தில் கூற முயன்றதோ, “இந்த மனிதன், இந்த நசரேயனாகிய இயேசு, ஒரு திருடனாயிருந்தார். அவர் ஒரு திருடனாயிருந்தார்” என்று கூறினார். 509 அப்பொழுது நான், “ரபீ, எப்படி அவர் ஒரு திருடனாயிருந்தார்?” என்று கேட்டேன். 510 அதற்கு அவர் “உங்களுடைய சொந்த வேத வசனங்களே, ‘அவர் ஓய்வு நாளிலே பயிர் வழியேப் போய்க் கதிர்களை எடுத்துக் கொண்டார்’ என்று கூறியுள்ளதே” என்றார். 511 அப்பொழுது நான், “இப்பொழுது ரபீ, நீர் நன்கு…அதைப் பார்க்கிலும் வேதத்தைக் குறித்து அதிகமாக அறிந்திருக்கிறீர். உங்களுடைய சொந்த வேதவாக்கியமே அது நியாயப் பிரமாணஞ் சார்ந்தது என்று கூறுகிறதே, அதாவது ‘ஒரு மனிதனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், அவன் வேண்டுமான கதிர்களைக் கொய்யலாம், ஆனால் அவன் அந்த விளைச்சலை தன்னுடைய சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்பது நியாயமாயுள்ளதே.’ ரபீ, அது உங்களுடைய சொந்த நியாயப் பிரமாணமாயிற்றே” என்றேன். 512 அவர் அங்கேயே சற்று நேரம் திகைத்துப் போய் நின்று விட்டார், அவர்—அவர்—அவர் அதை விசுவாசித்தார், ஏனென்றால் அவர்—அவர் சாட்சி பகர்ந்தார். அவர் கொஞ்சம் கழித்து இவ்வாறு கூறினார், அவர், “ஜானுடைய கண்கள்…எந்த—எந்த காரணத்தால் திறக்கப்பட்டது?” என்றும், “நீர் அதை எப்படி செய்தீர்?” என்றும் கேட்டார். 513 அப்பொழுது நான், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” என்றேன். 514 “ஊ”. அவர்—அவர் அதை அறிந்திருக்கவில்லை, தொடர்ந்து அவர், “உங்களால் தேவனை மூன்று துண்டுகளாக வெட்ட முடியாது” என்றார். 515 நான், “ரபீ, அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட யோகோவாவாயிருந்தார். அவர்…அந்தவிதமாகத்தான் அவர் இருந்தார், அவர் மாம்சத்தில் யேகோவாவாயிருந்தார். அவருடைய சொந்த மானிட நாமம், அதுவே மீட்பின் நாமமாயிருந்தது, ஏனென்றல் ஒரு மனிதன் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழே வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை, அந்த மானிட மீட்பின் நாமமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே. இரட்சிக்கப்பட முடியும். அது உண்மை. அவர் தேவனாய் இருந்தார், அவர் தேவனாயிருக்கிறார், அவர் என்றென்றைக்கும் தேவனாயிருப்பார், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பது முற்றிலும் உண்மையே” என்றேன். 516 இப்பொழுது, புறஜாதி சபையானது சீக்கிரத்தில்…புறஜாதி சபையின் சரீரத்தின் முடிவு உண்டாகும் என்று நான் விசுவாசிக்கிறேன். வாசல்கள்…இடையே…இயேசு மத்தேயு 24-ல் கூறினார், (நான் அந்த ஒரு வேதவாக்கியத்தை ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ள உள்ளேன்), அவர், “புறஜாதி யுகம் நிறைவேறும் வரைக்கும் அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள்” என்றார். 517 இப்பொழுது கவனியுங்கள். யூதர்கள் காட்சியிலிருந்து எடுக்கப்படுவர் என்று மத்தேயு 24-ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுவினால் அது கூறப்பட்டது. முன்பு இருந்த பண்டைய தீர்க்கதரிசிகளில், தானியேல் கூறினான், அவன், “எழுபதாவது வாரம் இன்னும் யூதர்களுக்கு குறிக்கப்பட்டிருக்கும். (பிரபு) வாகிய மேசியா வந்து, எழுபதாவது வாரத்தின் மத்தியில் தீர்க்கதரிசனம் உரைப்பார், அது ஏழு வருடங்களாயிருந்தது, அந்த வாரத்தின் பாதியில் அவர் சங்கரிக்கப்படுவார். அது எவ்வளவு பரிபூரணமாயிருந்தது என்று பாருங்கள், இயேசுவானவர் சரியாக மூன்றரை வருடங்கள் பிரசங்கித்தப் பிறகு சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் மூன்று…அது இங்கே இந்த மற்ற கேள்வியில் வருகிறது. யூதர்களுக்கு, இன்னும் அவர்களுக்கு மூன்றரை வருடங்கள் உள்ளன. அது இருக்கத்தான் வேண்டும். 518 இப்பொழுது நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 7-வது அதிகாரத்தை எடுத்துக் கொள்வீர்களேயானால், அதில் யோவான் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் யூதர்கள் யாவரும் முத்திரையிடப்பட்டதையும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறித்தும் கண்டான். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? இன்னும் சம்பவிப்பதற்கு முன்னர், வருகை முதலியவற்றைக் குறித்துக் கண்டான். 519 இப்பொழுது நாம் முடிப்பதற்கு முன்பு இப்பொழுது இது எவ்வளவு அழகாக உள்ளது என்பதைப் பாருங்கள். அது எப்படி சுற்றி அசைகிறது—எப்படி என்று கவனியுங்கள். இப்பொழுது, அந்த யூதர்கள் அந்தகாரமாக்கப்பட்டிருக்கின்றனர். 520 இப்பொழுது, இங்கே இந்த யூதர்கள், இங்கே அவர்களில் அநேகர், அப்படியே…அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், அவர்கள் உலகத்தின் செல்வத்தையே பிடித்து வைத்துள்ளனர். அவர்கள் வெறுமென—பண சிந்தை கொண்ட ஜனங்கள், அவ்வளவுதான் உங்களால் அவர்களிடத்தில் பார்க்க முடியும், பாருங்கள்; மிகவும் கர்வமுள்ளவர்கள், அலட்சியப் போக்குடையவர்கள், செவிகொடுக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயானால், அவர் பேசிக் கொண்டிருந்தது இந்த யூதர்களைக் குறித்து அல்ல. 521 இப்பொழுது, புறஜாதிகள்…இப்பொழுது கவனியுங்கள், இந்த யூதர்களுக்காக இன்னும் மூன்றரை வருடங்கள் விடப்பட்டிருக்கின்றன். இப்பொழுது, புறஜாதியாரின் யுகம் முடிவுறும் வரை எருசலேம் நகரம் புறாஜாதிகளால் மிதிக்கப்படும் என்று இயேசு கூறினார்…(இப்பொழுது ஜனங்களாகிய நீங்கள் யுகங்களில் நம்பிக்கைக் கொள்வதில்லை, அதைக் குறித்து என்ன?)…புறஜாதி யுகம் முடிவுறும் வரை…புறஜாதி யுகம் முடிவுறும் போது (புறஜாதியாரின் காலம் முடிவுறும்போது), அப்பொழுது அந்த நகரம் யூதர்களிடத்திற்கு திரும்ப அளிக்கப்படும். இயேசு அந்த சந்ததியைக் குறித்து…அதைக் கூற முன்னதாகவே சென்றார்….அவர், “நீங்கள் வெளியே போய், அத்தி மரம் துளிர்விடுதையும், மற்ற எல்லா மரங்களும் துளிர் விடுவதையுங் காணும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்” என்றார். மேலும், “அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றார். 522 இப்பொழுது, அவர்கள், “அந்தவிதமாக அவர் பேசிக்கொண்டிருந்தபடியால்” அந்த சந்ததியில் அதற்காக அவர்கள் கவனித்து வந்தனர். அப்படி இல்லையே! 523 கவனியுங்கள்! அவர், “அத்தி மரம் துளிர்விடுவதைக் கண்ட சந்ததி” என்றார். இப்பொழுது கவனியுங்கள், அவர், “அத்திமரமும், மற்ற எல்லா மரங்களும்” என்றார். இப்பொழுது வேறு வார்த்தைகளில் கூறினால், “அந்த நேரத்தில் ஒரு உலகளாவிய எழுப்புதல் உண்டாயிருக்கும்.” இப்பொழுது இந்த தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள், அது எப்படி கிரியை செய்கிறது என்றும், எப்படி பரிபூரணமாய் ஒன்று சேருகிறது என்பதையும் கவனியுங்கள். இப்பொழுது கவனியுங்கள். “மற்ற எல்லா மரங்களும் துளிர்விடுதல், புதுப்பித்தல்.” ஒரு மரம், அது துளிர்விடும் போது, புதுபித்துக் கொண்டிருக்கிறது. அது சரிதானே? இப்பொழுது, எவருமே, அத்தி மரமானது எப்பொழுதுமே யூதர்களைக் குறிக்கிறதாய் இருந்து வருகிறது என்பதை ஒரு தீர்க்கதரிசன ஆசிரியரும் அறிவார். நாம் அதை அறிவோம். அது யூதர்களாகும். இப்பொழுது… 524 யோவேலைக் கவனியுங்கள், அவன் அதை எடுத்துக் கூறினபோது, அவன், “பச்சைப் புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது; முசுக்கட்டைப் பூச்சி விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி புசித்து…” என்றான். நீங்கள் கவனிப்பீர்களேயானால், அந்த ஒரே பூச்சி வித்தியாசமான பருவங்களில் உள்ளது. பச்சைப் புழு, முசுக்கட்டைப் பூச்சி, வெட்டுக்கிளி. அது எல்லாமே ஒரே பூச்சியாயிருக்கிறது, அது அதனுடைய ஜீவியத்தின் வித்தியாசமான நிலைகளில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், அந்த அதே பூச்சி அங்கே முன்பிருந்த யூதமதத்தை தின்னத் தொடங்கினது, அது வெட்டப்பட்டு, அது அதனுடைய அடிக்கட்டை வரை தின்று கொண்டே சென்று விட்டது; ஆனால் அதன்பின்னர் அவன், “‘நான் திரும்ப அளிப்பேன்’ என்ற கர்த்தர் சொல்லுகிறார், ‘முசுக்கட்டைப் பூச்சிகள் இத்தனை வருடங்களாக பட்சித்ததைத் திரும்ப அளிப்பேன். நான் என் ஜனத்தை மகிழ்ச்சியாக்குவேன்!’ என்றார்” என்று கூறினான். புரிகிறதா? இப்பொழுது, அந்த மரம் தின்னப்பட்டு வந்தது. புறஜாதிகள் அதற்குள் ஒட்ட வைக்கப்பட்டனர். அது உண்மை. சரி, நாம் கனி கொடுக்க வேண்டும். 525 இப்பொழுது முடிவின் நேரம் வரும்போது, நாம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது, (அது சரியா என்று நான் பார்க்கிறேன்) சுவிசேஷத்தில், ஒரு மகத்தான எழுப்புதல் சம்பவிக்க வேண்டியதாயுள்ளது. 526 இப்பொழுது யூதக் கொடியானது உலகத்திலேயே மிகப் பழமையான கொடி என்பதை நீங்கள் அறிவீர்களா? அது இரண்டாயிரம் ஆண்டுகளாக, அதற்கும் மேலாக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக பறக்காமல் கிடந்து வருகிறது. பாபிலோனுக்கு சிறைப்பட்டு போனது முதற்கொண்டு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக தாவீதின் அறுமுனை நட்சத்திரக் கொடியான யூதக் கொடி ஒருபோதும் பறக்கவேயில்லை. இப்பொழுது, ரோம சாம்ராஜ்யம் அவைகளைக் கைப்பற்றியிருந்த காரணத்தால் (மேசியா வந்த போது, அவர்கள் அவரை புறக்கணித்தனர்), அவர்கள் பூமியின் நான்கு திசைகளிலும் சிதறடிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே மாதம் ஆறாம் தேதி 1946-ம் வருடம், மீண்டும் அந்தக் கொடியானது மீண்டும் எருசலேமின் மேல் பறந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? 1946-ம் வருடம் மே மாதம், ஏழாம் தேதி நாள் கர்த்தருடைய தூதன் எனக்கு இங்கே பிரசன்னமாகி, (அதற்கு அடுத்த நாள்) உலகம் முழுவதிலும் எழுப்புதலைக் கொண்டுவர, என்னை அனுப்பினதை நீங்கள் அறிவீர்களா? அதற்கு அடுத்த காலையே! அந்தப் பிற்பகல் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கையில் அந்தக் கொடியானது எருசலேமில் ஏற்றப்பட்டபோது, அதே நேரத்தில் இங்கே அமெரிக்க ஐக்கிய நாட்டில் கர்த்தருடைய தூதன் பிரசன்னமானார். “நீங்கள் அத்திமரமும், மற்ற மரங்களும் துளிர்விடுவதைக் காணும்போது!” 527 அநேக ஆண்டுகளுக்கு முன்னர் ஒஹையோ நதியில் அங்கே வந்து தொங்கின அந்த நட்சத்திரம் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? அப்பொழுது அவர் கூறினது…அவர் இறங்கி வந்தபோது, இதோ இன்னமும் அதைக் குறித்த ஒரு புகைப்படம் இங்கே உள்ளது. அவர், “முதல் வருகைக்கு ஒரு முன்னோடியாக யோவான் சென்றதுபோல உன்னுடைய செய்தியானது இரண்டாம் வருகைக்கு ஒரு முன்னோடியாக புறப்பட்டுச் செல்லும்” என்றார். பாருங்கள், உலகம் முழுவதிலும் ஒரு எழுப்புதல் வீசியது. கோடிக்கணக்கான மடங்கினைக் கொண்ட ஒரு மகத்தான எழுப்புதல். 528 பிரமாணங்கள் கடைபிடித்தவர்களும், தேசத்தை சுற்றிலுமிருந்த பல்வேறுபட்டவர்கள் மற்றும் பெரிய சபைகள், “பில்லி சண்டேயின் நாட்கள் முடிவுற்றுவிட்டன” என்றனர். ஆனால் சபையானது புதுப்பிக்கத் துவங்கினதை அவர்கள் (சாதாரண ஜனங்கள்) கண்டபோது, அவர்கள் தங்களுடைய தப்பிதங்களை உணர வேண்டியவர்களாயிருந்தனர். சார்லஸ் புல்லர் அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் அவர் மிகவும் வயோதிகராயிருந்தார்; எனவே அவர்கள் பில்லி கிரஹாமோடு சென்றனர். தேவன் பில்லி கிரஹாமை தெரிந்து கொண்டு…இல்லை பாப்டிஸ்டு சபையில் செய்தார், அவர்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கொண்டனர். ஒரு பிரசங்கியாயிருப்பதைப் பொருத்தமட்டில் பில்லி கிரஹாமை சகோதரன் நெவிலோடு ஒப்பிட்டால், பாதிகூட இவர் பிரசங்கிப்பதைப் போன்று பிரசங்கிக்கிறதில்லை…இல்லை…எந்த வழியிலுமே ஒப்பிடவே முடியாது. ஆனால் அது என்னவாயுள்ளது? அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது, அது கூட்டமைப்பாயுள்ளது, எல்லோரும் அதைச் சுற்றிக் கொண்டனர், அதைச் சுற்றி ஒன்று சேர்ந்து கொண்டனர். பில்லியும் அதேக் காரியத்தைக் கூறுகிறார். பாருங்கள், அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயிருந்தது. தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற அது செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஒன்று திரளும்படியான ஆவியைப் பெற்றிருக்கவில்லை, ஆகையால் அவர்கள் ஒன்று திரளும்படியாக வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது; எனவே அவர்கள் அவ்வாறு செய்தனர். பில்லி வார்த்தையை பிரசங்கிக்கும் ஒரு பிரசங்கியாய், ஒரு சிறந்த பிரசங்கியாயிருந்தபடியால் அவர்கள் சுற்றி ஒன்று திரண்டனர்; ஆகையால் அது அவர்களுடைய திரளான கூட்டத்தில் எல்லா குளிர்ந்த சம்பிரதாய முறையையும் கொண்டு சேர்த்தது. இயற்கைக்கு மேம்பட்டவர், தெய்வீக சுகமளித்தலோடு, வல்லமைகளோடு, கிரியைகளோடு தேவனுடைய அற்புதங்களினால் இந்த சபையில்…தன்னுடைய தீவட்டியில் எண்ணெய்யைப் பெற்றுக்கொண்ட எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய மணவாட்டியை, அவளுக்கு ஒரு எழுப்புதலை ஏற்படுத்தினார். புரிகிறதா? குளிர்ந்த சம்பிரதாயமான சபையோ அதனுடைய எழுப்புதலை உடையதாயிருந்தது. இங்கே இஸ்ரவேலர் தங்களுடைய எழுப்புதலோடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 529 நான் இப்பொழுது என்னுடைய வீட்டில் நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள் என்ற ஒரு திரைப்படத்தை அங்கே வைத்துள்ளேன். அந்த யூதர்கள் தங்கள் தேசத்திற்குள் வருவதைக் குறித்த ஒரு புகைப்படத்தையும் நாங்கள் வைத்துள்ளோம். அவர்கள் தங்கள் தேசத்திற்குள் வருவதைக் குறித்து நீங்கள் லுக் என்ற பத்திரிக்கையில் பார்த்து படித்திருக்கிறீர்கள். கப்பல்களில் ஏற்றப்பட்டு அங்கே ஈரானிலிருந்து வந்து கொண்டிருந்தனர்; அந்த யூதர்கள் இயேசுவானவர் பூமியின் மேல் இருந்ததையும், அவர்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டு போகப்பட்டதையும் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்ததைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தனர். அவர்கள் ஏர் உழுதனர்…அவர்கள் அங்கே பண்டைய மர கலப்பைகளைக் கொண்டு ஏர் உழுததை நீங்கள் லுக் அல்லது லைப் என்ற பத்திரிக்கையில் அவைகளைப் பார்த்திருக்கிறீர்கள். அவர்கள் அந்த ஆகாய விமானங்கள் அவர்களிலிருந்த இடத்திற்கு பறந்து வருவதைக் கண்டபோது, “அவர்கள் அங்கிருந்து கழுகின் செட்டைகளின் மேல் மீண்டும் சுமந்து கொண்டு செல்லப்படுவார்கள்” என்று தேவன் அவர்களிடத்தில் கூறியிருந்தபடியால், “அதுதான் இது” என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். அது உண்மை. அவர்கள் அந்நிலையில்தான் இருந்தனர். எனவே அந்த யூதர்கள், “அதுதான் இது” என்றனர். அவர்கள் அதில் ஏறிச் சென்றனர், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த அவர்களிடத்தில் அவர்களுடைய சொந்த குரலில் அவர்களிடம் பேட்டிக் கண்ட அவர்களுடைய திரைப்படங்களை நாங்கள் வைத்துள்ளோம். அவர்களில் சிலர் தங்களுடைய முதியவர்களை, தங்களுடைய முதுகில் சுமந்து வந்தனர், அவர்கள் குருடாயும், முடமாயுமிருந்தனர். அவர்கள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு உள்ளே வந்தனர். 530 அவர்கள் உடனே நிலத்திலிருந்த கற்களை கோணிப்பைகளில் பொறுக்கத் துவங்கினர்; அவர்கள் இன்றைக்கு தண்ணீர் ஊற்றுக்களை கண்டுபிடித்துள்ளனர், அது உலகத்திலேயே மிக மகத்தான வேளாண்மை தேசமாக உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா ஐஸ்வரியங்களையும் ஒன்று சேர்த்தாலும், அதைப் பார்க்கிலும் அதிகமான ஐஸ்வரியங்களை சவக்கடல் வைத்துள்ளது. யூதர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், இது புறஜாதிகளிடத்திலிருந்து மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் ஒரு ரோஜாவைப் போல மலர்ந்து கொண்டிருக்கிறார்கள். 531 அவர்கள்—அவர்கள்—அவர்கள் யூதர்களிடத்தில் கேட்டனர், அவர்கள், “நீங்கள் மரிப்பதற்காகவா தாய் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். 532 அப்பொழுது அவர்களோ, “நாங்கள் மேசியாவைக் காண திரும்ப வந்து கொண்டிருக்கிறோம். அவர் எங்கே இருக்கிறார்? அவர் இங்கே இருக்க வேண்டுமே” என்றனர். 533 சகோதரனே, அத்திமரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது, அவர், “இவைகளெல்லாம் சமபவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது” என்றார். சம்பிரதாயங்களோடுள்ள எழுப்புதலைப் பாருங்கள். சபையோடு உள்ள எழுப்புதலையும் பாருங்கள். யூதர்களோடு உண்டாகிற எழுப்புதலையும் பாருங்கள், அவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். சபை, ஆவியினால் நிரப்பட்ட சபை, மணவாட்டி…தங்களுடைய தீவட்டிகளில் எண்ணையோடு உள்ள கன்னிகைகள் கலியாண விருந்திற்குச் செல்வார்கள். 534 யூதர்களோ, “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காக காத்திருந்தோம்” என்பார்கள். அங்குதான் உங்களுடைய ஒரு இலட்சத்து நாற்பத்தி நாலாயிரம் பேர் உள்ளனர்…அதை ரசல் என்பவரின் கருத்துரைகளைப் பின்பற்றுபவர்கள் குழப்பியுள்ளனர். அங்கே நின்று கொண்டிருக்கும் அந்த யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள், “இவரே நம்முடைய தேவன்; இவருக்காகவே காத்திருந்தோம்” என்றனர். அவர்கள் அவரைப் பார்த்து, “அவைகளை உமக்கு எங்கே உண்டாயின? உம்முடைய கையில் உள்ள வடுக்கள் உமக்கு எங்கே உண்டாயின?” என்று கேட்பார்கள். 535 அவர், “நான் அவைகளை என் சிநேகிதரின் வீட்டில் பெற்றுக் கொண்டேன்” என்றார். அது உண்மை, “அது என் சிநேகிதரின் வீட்டில்.” 536 அவர் என்ன் செய்வார்? புறஜாதி சபையானது மகிமைக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மணவாட்டியோ கிறிஸ்துவை மணந்து கொள்வாள். 537 யோசேப்பு தன்னுடைய ஜனங்களுக்கு எப்படி தன்னை வெளிப்படுத்தினான்? அவன் தன்னுடைய சமூகத்திலிருந்து எல்லா புறஜாதிகளையும் வெளியேற்றிவிட்டான். அவன் நிச்சயமாகவே செய்தான் ஸ்திரீயினுடைய சந்ததியான மற்றவர்களுக்கு என்ன சம்பவிக்கும்? வலுசர்ப்பம் தன்னுடைய வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி யுத்தம் பண்ணப் போயிற்று; இயேசு, “அவர்கள் புறம்பான இருளுக்குள் தள்ளப்படுவார்கள், அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்,” என்றார். அந்த பெரிதான துன்ப வேளைகளில் புறஜாதி சபைக்கு சோதனைகள் உண்டாகும். 538 அப்பொழுது என்ன சம்பவிக்கும்? இரத்த சாட்சிகள் வரும்போது, தேவன் அப்பாலுள்ள யூதர்களிடத்திலிருந்து ஒவ்வொன்றையும் பிரித்துள்ளபோது, யோசேப்பு செய்ததுபோல இயேசு திரும்புவார். அவர்கள் யோசேப்பைக் குறித்து கேள்விப்பட்டபோது, அவன் தன்னுடைய எல்லா காவலர்களையும் மற்றுமுள்ள எல்லோரையும் வெளியேற்றிவிட்ட போது, அவன் சிறிய பென்யமீனையும், அவர்கள் அங்கு நிற்பதையும், யோசேப்பை கொன்றதற்காக அவர்கள் வருத்தப்படுவதையும் கண்டான். அவர்கள் யோசேப்பை கொன்று விட்டோம் என்றே எண்ணியிருந்தனர், இங்கோ அவன் அவர்களுக்கு முன்பாக நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “நான் யோசேப்பு. நான் உங்களுடைய சகோதரன்” என்றான். 539 அப்பொழுது அவர்கள், உண்மையாகவே நடுங்கி, “அவர் யோசேப்பு. இப்பொழுது நாம் அவரை அறிவோம்,” என்றனர். 540 அவர், “நான் இயேசு, நான் மேசியா” என்று கூறும்போது, 541 அவர்களோ, “ஓ, என்னே, இப்பொழுது நாம் என்ன தண்டனையை பெற்றுக் கொள்வோம்!” என்பார்கள். 542 இவையாவும் தேவனுடைய மகிமைக்காக நடந்தன. அது அவர்…மாட்டாது…நல்லது, பார்வோனின் அரண்மனையில் அவன் அழுவதை அவர்களால் கேட்க முடிந்தது, யோசேப்பு அவர்களுக்காக அழுதான். 543 புறஜாதியாராகிய நாம் ஒரு வாய்ப்பினைப் பெற்று, உள்ளே வரும்படிக்கு, இயேசு குருடாக்க வேண்டியதாயிருந்த அந்த யுதர்களை அவர் காணும் வரைக் காத்திருங்கள், அந்த வேளை உண்டாகும் என்றே நான் உங்களிடத்தில் கூறிக் கொண்டிருக்கிறேன். அவர் அந்த யூதர்களை ஏற்றுக் கொள்வார், நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம், அந்த யூதர்கள் இரட்சிக்கப்படுவர். ஆம், ஐயா, அங்கே சம்பவிக்கத் தான் வேண்டும். அதுவே அதைக் குறித்த என்னுடைய கருத்தாயுள்ளது, வேதத்தில் அதை இதற்கு மேல் வேறெங்கும் என்னால் காண முடியவில்லை. நீங்கள் அவர்கள் மூவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து கவனிக்க வேண்டும். 544 நீங்கள் உறங்கும் கன்னிகையை, வெறுமென சாதாரண சபையை, ஒப்புதல் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டும், பாருங்கள். நீங்கள் சபைக்குச் சென்று…அதாவது முதலில் யூதர், முதலில் யூதர், குருடாக்கப்பட்ட நபராய் ஓரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் அடுத்த கட்டத்தை கவனிக்க வேண்டுமானால் அது உறங்கும் கன்னிகையாய் உள்ளது, தாமதப்படுத்திக் கொண்டிருந்தவர்கள், வெறுமென சபைக்குச் சென்று, சபையில் சேர்ந்து, அழகான நல்ல நபராய் இருந்தனர். அதன்பின்னர் நீங்கள் சபையை, ஆவிக்குரிய பிரகாரமானதை, எடுத்துக் கொள்ளப்படுதலுக்கான மணவாட்டியைக் கவனிக்க வேண்டும், அவள் அங்கு நிற்கிறாள். அந்த மூன்று ஜனங்கள், உங்கள்…முடியாது…அவர்கள் சற்றேனும் கலக்கப்படவில்லை. அவர்கள் எல்லோரும் ஒரேவிதமாக இல்லை. யேகோவா சாட்சிக்காரர், “அங்குள்ள ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் மணவாட்டி” என்று கூறுவது போல் அல்ல; அது தவறாகும். அது யூதர்கள், பாருங்கள். ஒரு மணவாட்டி, யூதர்கள், உறங்கும் கன்னிகைகள் உள்ளனர். நீங்கள் அவர்கள் எல்லோரையும் புரிந்து கொண்டு, “நல்லது, அவர்கள் மூவரும் வித்தியாசமான இடங்களில் இருக்கிறார்கள்” என்று கூறுவீர்கள். அவர்கள் எல்லோருமே, மூன்று வகையான வித்தியாசமான ஜனங்களாய் உள்ளனர். நிச்சயமாகவே அவர்கள் ஒரே வகையானவர்களாயிருக்க முடியாது. 545 அதன்பின்னர் இயேசு பூமிக்கு திரும்பும்போது…யூதர்கள், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள்? ஆலயத்தைக் காவல்புரியும் அண்ணகர்கள். இயேசு திரும்பி வரும்போது, அவர் மணவாட்டியோடு வருகிறார். இயேசு மூன்று முறை வருகிறார்: அவர் முதல் முறை தம்முடைய சபையை மீட்க வந்தார், அவர் இரண்டாம் முறை தம்முடைய சபையை ஏற்றுக்கொள்ள வருகிறார், அவர் மூன்றாம் முறை தம்முடைய சபையோடு வருகிறார். புரிகிறதா? சரியாக. ஆகையால் அவை யாவும் ஒரு மகத்தான பரிபூரண வருகையாயுள்ளது, அவை யாவும் ஒரே மகத்தான பரிபூரண தேவனாய் உள்ளது; அவை யாவும் ஒரே மகத்தான பரிபூரண தேவனாய் உள்ளது; அவையாவும் ஒரே மகத்தான பரிபூரண கிறிஸ்துவாயுள்ளது: ஒரே மகத்தான பரிபூரண சபை, ஒரே மகத்தான பரிபூரண மீட்பு…ஒவ்வொரு காரியமும்; அது ஒரு திரித்துவமாய் உண்டாகிறது, ஆனால் அவை யாவும் ஒன்றில் உள்ளது. புரிகிறதா? அது மூன்று ஜனங்கள் அல்ல, இது மூன்று அல்ல; அது ஒரே நபராய், ஒரே சபையாய், ஒரே சரீரமாய், ஒரே கிறிஸ்துவாய், ஒரே கர்த்தராய், “உங்கள் எல்லோருக்குள்ளும், உங்கள் எல்லோர் மூலமாயுமுள்ளது,” அதைப் போன்றதாகவே உள்ளது. எல்லாம் ஒன்றே! 546 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை சற்று நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொண்டேன். 547 இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஒரு சில இரவுகள், மீண்டும் வருவேனானால் அல்லது ஒரு ஞாயிறு இரவு அல்லது அதைப்போன்று ஒரு சமயம் வந்தால், அப்பொழுது இங்கு மேய்ப்பன் தன்னுடைய இருதயத்தில் கூறுவதற்கு எந்த ஒரு காரியத்தையும் உடையவராயில்லாமலிருந்தால், நான் இவைகளுக்கு இங்கு பதிலளிக்க முயற்சிப்பேன். ஓ, இங்கே சில சிறந்த கேள்விகள் இன்னும் உள்ளன. எத்தனைபேர் அவைகளைக் குறித்து கேட்டறிந்து கொள்ள விரும்புவீர்கள்? ஓ, நான் அவைகளை விரும்புகிறேன். நாம் ஆராதனையை மேய்ப்பரிடம் ஒப்படைக்கும் முன் நான் மீண்டும் அவைகளினூடாக, உடனே துரிதமாகச் செல்லட்டும். 548 இதற்கு செவி கொடுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் பின்வரும் எட்டு கேள்விகளுக்கும் பாகம் III—ல் பாரா 668—லிருந்து துவங்கி, கேள்வி எண்கள் 67-லிருந்து 74—வரையிலுமாக பதிலளிக்கிறார்—ஆசி.] அந்த கற்கள் எங்கே பிரிதி…வெளிப்படுத்தின விசேஷம் 21—ல் உள்ள இந்த கற்கள் எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன? அது ஒரு நல்ல கேள்வியாயுள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 5 அதிகாரத்தில் உள்ள நான்கு ஜீவன்களைக் குறித்து விளக்கிக் கூறவும். அங்கே மற்றொரு நல்ல கேள்வியும் உள்ளது. இருபத்தி நான்கு மூப்பர்கள் யார்? அங்கே இன்னொரு நல்ல கேள்வியும் உள்ளது, பாருங்கள். ஆதியாகமம் 38-ம் அதிகாரத்தில் உள்ள சிவப்பு நூல் எதைப் பொருட்படுத்தினது? உங்களுக்கு நினைவிருக்கும், அவன் போய், தன்னுடைய சொந்த மருமகளையே ஒரு வேசி என்று எண்ணி அவளோடே சேர்ந்துவிட்டான்; அதற்கு கிரயத்தையும் பேசி கொடுத்து அனுப்பினான்; அதன்பின்னர் அந்தப் பிள்ளை பிறக்கும்போது, அவர்கள் அதனுடைய கையில் சிவப்பு நூலைக் கட்டினர். (அந்தப் பிள்ளை முதலில் கையை வெளியே நீட்டி, பின்னர் அதை உள்ளே இழுத்துக் கொண்டது), எனவே இவனுக்கு முன்னால் அடுத்தவன் பிறந்துவிட்டான். ஓ, அது நல்ல ஒன்றுதான்; அது நிச்சயமாகவே நல்ல கேள்வியாய் உள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தில் உள்ள சாட்சிகளின் மரணத்தைக் குறித்து அனுப்பப்படவுள்ள வெகுமதிகள் என்னவாயிருக்கின்றன? அப்பொழுதுதான் மோசேயும், எலியாவும் இந்த ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களின் எழுப்புதலுக்காக திரும்பி வருகிறார்கள். அந்த வெகுமதிகள் என்னாவாயுள்ளன? அவைகள் என்னவாயிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள், அதுவும் சிறந்ததாய் உள்ளது. ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு…பரிசுத்தவான்கள் எங்கேயிருப்பர்? (பையனே, அதுவும் நல்ல ஒரு கேள்வி…)…ஆளுவார்களா? அவர்கள் எந்தவிதமான ஒரு சரீரத்தில் இருப்பார்கள்? நாம் எப்படி தூதர்களை நியாயந்தீர்ப்போம்? கொரிந்தியர் முதலாம் நிரூபத்தில் ஏன் தூதர்களினிமித்தம் ஏன் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்? கொரிந்தியரின் புத்தகம் முதலாம் நிரூபத்தில். சில நல்ல கேள்விகள், உண்மையாகவே நல்ல கேள்விகளாய் உள்ளன. 549 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாம் இந்தக் காரியங்களை ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்தறிய கர்த்தர் அனுமதிப்பார் என்று நான் நம்புகிறேன், அவை யாவும் அவருடைய மகிமைக்கானதாயுள்ளது. அவைகளைக் குறித்த கருத்துகளின் பேரில் நாம் வேறுபாடு கொள்ளலாம். ஆனால் நான் ஒரு காரியத்தைக் கூறுவேன், நான் அவைகளைக் குறித்து பேசும்போது, நீங்கள் எல்லோருமே அவைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்வீர்களேயானால் நலமாயிருக்கும், நாம் ஒரு அற்புதமான நேரத்தை உடையவர்களாயிருந்து கொண்டிருக்கிறோம். ஆமென். ஆமென். 550 சரி, இப்பொழுது கர்த்தர் உங்களுக்கு உண்மையாகவே நல்லவராக இருப்பாராக. ஆராதனைகளை மறந்துவிடாதீர்கள். சகோதரன் நெவிலினுடைய ஒளிபரப்பு, இப்பொழுது, அது சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு W L R P என்ற ஒலிப்பரப்பில் ஒலிபரப்பப்படும், நெவிலின் நால்வர் குழுப் பாடல், அவை உங்களுக்கு நன்றாயிருக்கும், வானொலியைத் திரும்பி அவைகளைக் கேளுங்கள். என்னால் முடித்தால், என்னால் சீக்கிரமாக நேரத்திற்கு வர முடிந்தால், அல்லது நான் திரும்பி வரப்போவதைக் குறித்து என்னுடைய மனைவியை அழைத்து கேட்டுப்பாருங்கள்; அருமையான வயோதிக சகோதரன் பாஸ்வர்த்தைக் காணப் போகும்படி கர்த்தர் என்னை அனுமதித்தால் நலமாயிருக்கும். நான்…நீங்கள் யாவரும்…நான் ஞாயிறு இரவு திரும்பி வந்துவிடுவேன். 551 கர்த்தர் இப்பொழுது உங்களுக்கு நல்லவராக இருப்பாராக சகோதரன், மேய்ப்பன், ஒரு நிமிடம் இங்கு வந்து ஆராதனை ஏற்று நடத்தட்டும். மற்றும்: குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதிர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுடைய ஒவ்வொரு கவலையையும் ஏற்றுக்கொள்வார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள். 552 நீங்கள் அதை விரும்புகிறீர்களா? உங்களுடைய சொந்த வீட்டில் எத்தனைபேர் ஜெபிக்கிறீர்கள்? நாங்கள் பார்க்கட்டும், எல்லாரும்…எல்லோரும்…அது அருமையாயுள்ளது, தேவனண்டை நெருக்கமாய் தரித்திருங்கள். அது நன்மையாயிருக்கும், சிறு பிள்ளைகளே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, சகோதரன் நெவில்.